தக் லைஃப் படத்தின் முதல் விமர்சனம்..கங்குவா ரேஞ்சுக்கு பில்ட்அப் விடுத்த நடிகர்..!

Author: Selvan
30 November 2024, 4:45 pm

தக் லைஃப் படத்திற்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

கமல் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் தக் லைஃப் அடுத்த ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி வெளிவர இருக்கிறது.

இதில் சிம்பு,அபிராமி,திரிஷா போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.இந்நிலையில் படத்தின் முக்கியமான ரோலில் நடித்திருக்கும் அலி பைசல் படம் பற்றிய தன்னுடைய முதல் விமர்சனத்தை கொடுத்துள்ளார்.

Thug Life Tamil movie update

ஹிந்தி நடிகரான இவர் தமிழில் நடிக்கும் முதல் படம் இது. இப்படத்தில் நடித்த போது நான் நிறைய விசயங்களை கற்றுக்கொண்டேன் எனவும் என் வாழ்வில் மறக்கமுடியாத நிகழ்வாக இப்படம் அமையும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்க: சிவராஜ்குமார் பதில் இவரா..தமிழ் நடிகருக்கு கிடைத்த சூப்பர் சான்ஸ்..!

இந்திய ரசிகர்களை தண்டி சர்வதேச அளவில் இப்படம் மிகப்பெரிய மாற்றத்தை உண்டு பண்ணும் என தெரிவித்துள்ளார்.இவர் சொல்லிய தகவல்கள் வைரல் ஆகி வரும் நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

Ali Fazal Tamil debut in Thug Life

இதே மாதிரி கங்குவா படத்தையும் நடிகர் சூர்யா மற்றும் படக்குழு ரிலீஸ் ஆவதுற்கு முன்னாடியே 1000 கோடி வசூலை அள்ளும் என சொல்லிவந்தார்கள்.அதே மாதிரிதக் லைஃப் படமும் அமைந்திருமோ என ரசிகர்கள் ஒரு பக்கம் கவலையுடன் இருக்கின்றனர்.

  • நகைச்சுவை நடிகர் மரணம்.. வீட்டுக்கே சென்று ₹1 லட்சம் கொடுத்த விஜய்.. அறிந்திராத உண்மை!
  • Views: - 142

    0

    0