சாமியாரின் வசியத்தால் சினிமா விட்டு விலகிய கண்ணழகி நடிகை.. வெளிச்சத்திற்கு வந்த உண்மை!

Author: Udayachandran RadhaKrishnan
30 November 2024, 6:11 pm

பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் தற்போது பிரபல நடிகை குறித்து பேசியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.

நடிகை மாதவி திரையுலகில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றவர். கமல் ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப் படங்களில் நடித்த மாதவியை, ரசிகர்கள் “கண்ணழகி மாதவி” என்று அழைத்தனர். அவரின் கண்களின் அழகு, வசீகரமாக இருப்பதால், இதை மையமாகக் கொண்டு ரசிகர்களிடம் பிரபலமானார்.

ஆனால், மாதவிக்கு ஆன்மீகத்தின் மீது அதிகமான ஈர்ப்பு இருந்தது. சாமியார் ராம் என்ற ஆன்மிக நிபுணரின் பக்தையாக மாறிய அவர், திருமணத்தைத் தவிர்த்து ஆன்மிக வாழ்க்கையில் முழுமையாக ஈடுபட்டார்.

இதையும் படியுங்க: சபரிமலையில் நுழைய இசைவாணி முயற்சி? கொந்தளிக்கும் சேட்டன்கள்!

இதை அறிந்த சாமியார் ராம், தொழிலதிபர் ரால்ப் சர்மாவை அறிமுகம் செய்து, அவரை திருமணம் செய்ய அறிவுறுத்தினார். சாமியாரின் ஆலோசனை ஏற்று, மாதவி ரால்ப் சர்மாவை திருமணம் செய்து கொண்டு, திரையுலகை விட்டு விலகி குடும்ப வாழ்க்கையை ஆறுதலாக நடத்தி வருகிறார் என்று பழைய நடிகர் பயில்வான் ரங்கநாதன் குறிப்பிட்டுள்ளார்.

Actress Madhavi Followd saint words and marriage

மாதவியின் திரையுலக பயணம் தெலுங்கு படத்துடன் தொடங்கியது. தமிழில் அவரின் அறிமுகம் தில்லுமுல்லு திரைப்படத்துடன் நிகழ்ந்தது, அதுவே ஒரு வெற்றிப் படமாக அமைந்து, தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடிக்கும் வாய்ப்புகளை பெற்றார். ராஜபார்வை, டிக் டிக் டிக், தம்பிக்கு எந்த ஊரு, காக்கி சட்டை உள்ளிட்ட பல படங்களில் நடித்த மாதவி, தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் 100க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக களமிறங்கினார்.

Actress Madhavi Quit cinema and relax with family

மாதவியின் கண்ணழகில் மயங்கி பல இளசுகள், அவரை “கண்ணழகி” என புகழ்ந்தனர். திரையுலகில் தன் அழகு, திறமை, மற்றும் தனித்துவமான வாழ்க்கை முறையால் மாதவி, ரசிகர்கள் மனதில் இன்று வரை தனித்த இடம் பிடித்துள்ளார்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 123

    0

    0