முட்டை புலாவ் இந்த மாதிரி செய்தா இனி தினமும் இது தான் வேண்டும்னு வீட்ல எல்லாரும் அடம்பிடிக்க போறாங்க!!! 

Author: Hemalatha Ramkumar
30 November 2024, 7:53 pm

முட்டை புலாவ் சாப்பிடுவதற்கு மிகவும் ருசியாக அதே நேரத்தில் எளிமையாக செய்யக்கூடிய ஒரு ரெசிபி. இதனை ஒரு சில நிமிடங்களிலேயே விரைவாக செய்துவிடலாம். இந்த முட்டை புலாவ் சாதத்தில் ஃபிரெஷாக அரைத்த மசாலாவை சேர்க்க போவதால் அது சிறந்த ஃபிளேவரையும் சுவையையும் கொடுக்கும். இதனை ரைத்தாவோடு சாப்பிடுவதற்கு அருமையாக இருக்கும். இப்போது முட்டை புலாவ் எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள் 

சீரக சம்பா அரிசி – 2 கப்

தேங்காய் எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன் 

ஏலக்காய் – 4 

கிராம்பு – 4 

பிரியாணி இலை – 1 

பட்டை – ஒரு துண்டு

அன்னாசிப்பூ – 1 

பெரிய வெங்காயம் -2 

தக்காளி -2 

தேவைக்கேற்ப உப்பு  

தண்ணீர் – 3கப்

அரைப்பதற்கு தேவையான பொருட்கள்: 

புதினா இலைகள் – 1/2 கப் 

கொத்தமல்லி தழை – 1/2 கப் 

பச்சை மிளகாய் – 5 

இஞ்சி – 1 இன்ச் அளவு 

பூண்டு – 6 பல் 

முட்டைக்கு தேவையான பொருட்கள்:-

முட்டைகள் – 5 

உப்பு – 1/2 டேபிள் ஸ்பூன்

மிளகு பொடி – 1/2 டேபிள் ஸ்பூன் 

கரம் மசாலா – 1/2 டேபிள் ஸ்பூன் 

மிளகாய் தூள் – 1/2 டேபிள் ஸ்பூன் 

சமையல் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன் 

செய்முறை 

*அரைப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். 

*இப்போது ஒரு பிரஷர் குக்கரை அடுப்பில் வைத்து மசாலா பொருட்கள் அனைத்தையும் சேர்க்கவும். 

*பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். 

*அடுத்ததாக அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து 2 முதல் 3 நிமிடங்கள் வதக்கவும். 

*இப்போது நறுக்கிய தக்காளிகளை சேர்த்து வதக்குங்கள். 

இதையும் படிக்கலாமே:  பெண்களுக்கான பாடி ஆயில்கள்… எந்தெந்த சருமத்திற்கு எந்தெந்த எண்ணெய் ஏற்றதாக இருக்கும்…???

*தக்காளி நன்றாக வதங்கி மசிந்து வந்ததும் அதில் கழிவி வைத்த அரிசி மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். 

*இப்போது தண்ணீர் கொதிக்க ஆரம்பித்த உடன் பிரஷர் குக்கரை மூடி ஒரு விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும். 

*இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெயை சூடாக்கவும். 

*கொடுக்கப்பட்டுள்ள மசாலா பொடி சேர்த்து நன்றாக கலக்கவும். 

*இப்போது வேக வைத்த முட்டைகளை உங்களுக்கு விருப்பமான வடிவத்தில் வெட்டி சேர்த்து கிளறவும். 

*உப்பு மற்றும் மிளகுத்தூள் தூவி கலந்து கொள்ளுங்கள். 

*இரண்டு பக்கமும் பழுப்பு நிறம் ஆகும் வரை சமைக்கவும். 

*இப்போது இதனை பிரஷர் குக்கரில் தயாராக உள்ள சாதத்தோடு சேர்த்து பொறுமையாக கிளறி சூடாக பரிமாறவும்.

  • Bala and Kanja Karuppu relationship OFFICE BOY-யா வேல செஞ்ச பிரபல காமெடி நடிகர்…வாழ்க்கை கொடுத்த இயக்குனர் பாலா..!
  • Views: - 91

    0

    0