34 ஆண்டுக்கு பிறகு இணையும் மாஸ் கூட்டணி..ரஜினியின் அடுத்த பட அப்டேட்…!

Author: Selvan
1 December 2024, 12:55 pm

ரஜினி பிறந்த நாள் பட அப்டேட்

நடிகர் ரஜினிகாந்த் வயசானாலும்,அடுத்தடுத்து படங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.அந்த வகையில் கடந்த ஆண்டு இவருடைய நடிப்பில் வெளிவந்த வேட்டையன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையிலும் வசூலை அள்ளியது.

Rajinikanth upcoming film news

அடுத்தது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் ஷூட்டிங் போது ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று,தற்போது ஓய்வில் இருந்து வருகிறார்.

இந்த படத்தை தொடர்ந்து இவர் மீண்டும் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.அடுத்தடுத்து இரண்டு படங்களுக்கு,ரஜினியின் ரசிகர்கள் காத்திருக்கும் சூழலில்,தற்போது அடுத்த புது படத்தின் அப்டேட் அவருடைய பிறந்த நாள் அன்று வெளியாகும் என தகவல்கள் வந்துள்ளது.

Maniratnam and Rajinikanth collaboration

மணிரத்னம் மற்றும் ரஜினி கூட்டணி

கடந்த 1991 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான தளபதி திரைப்படம் ரஜினிக்கு மாஸ் ஹிட் படமாக அமைந்தது.இந்நிலையில் தற்போது 34 வருடங்களுக்கு பிறகு இவர்கள் மீண்டும் இணையளவுள்ளனர்.

ரஜினியின் 173 வது படமாக இப்படம் இருக்கும் எனவும்,படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் படத்தின் பற்றிய முக்கிய அறிவிப்பு அவருடைய பிறந்தநாள் அன்று வெளியாகும் என கூறப்படுகிறது.இந்த தகவலால் ரஜினி ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இருக்கின்றனர்.

  • Nayanthara and Vignesh Shivan viral video சோதிக்காதிங்கடா…விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விக்னேஷ் சிவன்…வைரலாகும் இன்ஸ்டா பதிவு..!
  • Views: - 65

    0

    0