பிரபல நடிகர் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவிப்பு.. அதிர்ச்சியில் திரையுலகம்!
Author: Hariharasudhan2 December 2024, 11:59 am
12த் பெயில் (12th Fail) பட நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி (Vikrant Massey) சினிமா வாழ்க்கையில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
மும்பை: விது வினோத் சோப்ரா இயக்கத்தில், கடந்த ஆண்டு அக்டோபரில் வெளியான திரைப்படம் 12த் பெயில் (12th Fail). இப்படத்தில் விக்ராந்த் மாஸ்ஸி, மேதா ஷங்கர், ஆனந்த் ஜோஷி மற்றும் அனுஷ்மான் புஷ்கர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர்.
ஒரு கிராமத்தைச் சேர்ந்த இளைஞன், பல்வேறு இன்னல்களைக் கடந்து எவ்வாறு ஐஏஎஸ் கனவை நிறைவேற்றுகிறேன் என்பதே இப்படத்தின் சாராம்சம். இப்படம் வெளியாகி பாலிவுட் மட்டுமின்றி, கோலிவுட், டோலிவு மற்றும் மல்லு பிராந்தியத்திலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
அதிலும், விக்ராந்த் மாஸ்ஸியின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. இந்த நிலையில், விக்ராந்த் மாஸ்ஸி (Vikrant Massey) தனது திரை வாழ்க்கையில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், “கடந்த சில ஆண்டுகளாக நீங்கள் (ரசிகர்கள்) எனக்கு ஆதரவு அளித்துள்ளீர்கள். அதற்காக ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கின்றேன். ஆனால், வாழ்க்கையில் நான் முன்னேறிச் சென்று கொண்டே இருந்தாலும், இப்போது நான் வீட்டிற்குச் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது.
ஒரு கணவனாக, தந்தையாக, மகனாக, ஒரு நடிகராகவும் இதனை கடமையாகச் செய்தே ஆக வேண்டும். வருகிற 2025ஆம் ஆண்டு கையில் இருக்கும் படத்தின் மூலம் நாம் கடைசியாகச் சந்திப்போம். என்றென்றும் நான் உங்களது அன்புக்கு கடமைப்பட்டிருக்கிறேன்” எனத் தெரிவித்து உள்ளார். இது பாலிவுட் ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்து உள்ளது.
இதையும் படிங்க: நடிகர் அல்லு அர்ஜுன் மீது புகார்..ரசிகர்களால் வந்த வினை…!
விக்ராந்த் மாஸ்ஸி தற்போது யார் ஜிக்ரி மற்றும் ஆன்கோன் கி கிஸ்தாகியான் ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அதேநேரம், தீரஜ் சர்னா இயக்கத்தில் விக்ராந்த் மாஸ்ஸி நடிப்பில் கடந்த நவம்பரில் வெளியான தி சபர்மதி ரிப்போர்ட் என்ற திரைப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.