காலையிலேயே அதிர்ச்சி.. அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!
Author: Hariharasudhan3 December 2024, 10:26 am
சென்னையில் இன்று (டிச.03) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 40 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: சர்வதேச சந்தையில் நிலவும் கமாடிட்டியைப் பொறுத்து தங்கம், வெள்ளி ஆகியவற்றின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், கடந்த சில வாரங்களாக தங்கம் விலை அதிகமான ஏற்றத்துடனே காணப்பட்டது. ஆனால், நேற்று திடீரென குறைந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயரத் தொடங்கி உள்ளது.
இதன்படி, இன்று (டிச.03) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 40 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 130 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 57 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: கர்ப்பிணி பேராசிரியை மரண வழக்கில் திருப்பம்.. சாட்சியாக வந்த 4 வயது மகன்!
அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 7 ஆயிரத்து 778 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 62 ஆயிரத்து 224 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.