பிக் பாஸ் சீசன் 8ல் ஒருவர் தற்கொலை : என்ன நடந்தது..? போலீஸார் விசாரணையில் ஷாக்!
Author: Selvan3 December 2024, 1:47 pm
விஜய் சேதுபதியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏற்பட்ட சோகம்
பிரபலமான விஜய் டிவியில் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன்8.
இந்த சீசனின் அசோசியேட் இயக்குனர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது .கிட்டத்தட்ட 50 நாட்களை கடந்து மக்கள் மத்தியில் ஒரு கலவையான விமர்சனத்துடன்,இந்த சீசன் பயணித்து வருகிறது.
ஆண்கள் vs பெண்கள் என உருவாக்கப்பட்ட டீமும் கலைக்கப்பட்டு,தற்போது எல்லோரும் தனித்தனியாக விளையாடி வருகின்றனர்.இதில் கடந்த வாரம் வைல்ட் கார்டு எண்ட்ரியாக நுழைந்த சிவகுமார் வெளியேற்றப்பட்டிருக்கிறார்.
இதையும் படியுங்க: பிரபல நடிகரின் மகன் கைது? கஞ்சா வழக்கில் டுவிஸ்ட் : சென்னையில் பரபரப்பு!
அசோசியேட் இயக்குனர் ஸ்ரீதரின் மரணம்
இந்த நிலையில் பிக் பாஸ் 8 சீசனில் அசோசியேட் இயக்குனராக பணிபுரிந்த ஸ்ரீதர்,தற்போது அவரது வீட்டில் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
அவரது தற்கொலைக்கு என்ன காரணம்,வேலையில் ஏதும் பிரச்சனையா இல்லை தனிப்பட்ட குடும்ப பிரச்சனையா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
ஆரம்பம் முதலே மக்கள் மத்தியில் சொல்லிக்கிடும் அளவிற்கு இந்த சீசன் இல்லாத நிலையில்,தற்போது ஸ்ரீதரின் தற்கொலை மேலும் பின்னடவை ஏற்படுத்தியுள்ளது.