இன்ஸ்டாவில் காதல்.. நம்பிக்கையில் சென்ற காதலன்.. நெல்லையில் கொடூரம்!

Author: Hariharasudhan
3 December 2024, 2:19 pm

தங்கையின் காதலனை திருமணம் செய்து வைப்பதாகக் கூறி வரவழைத்துக் கொன்ற அண்ணன் உள்பட இருவரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

திருநெல்வேலி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் என்பவர், அப்பகுதியிலே தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், விஜய்க்கு இன்ஸ்டாகிராம் மூலம் நெல்லை, பாளையங்கோட்டை அருகே உள்ள அண்ணா தெருவைச் சேர்ந்த ஜெனிபர் சரோஜா உடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

பின்னர், செல்போன் எண்களைப் பரிமாறிய இருவரும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த பத்து நாட்களுக்கு முன்பு ஜெனிபர் சரோஜா விஜய்யைப் பார்ப்பதற்காக கள்ளக்குறிச்சி சென்றுள்ளார். தொடர்ந்து விஜய்யின் வீட்டுக்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

மேலும், விஜய்யின் சகோதரி கணவரைப் பிரிந்து அவருடன் வசித்து வருவதால், தற்போது தன்னால் திருமணம் செய்து கொள்ள முடியாது எனவும், சிறிது நாட்கள் கழித்து தனது குடும்பத்தினரை அழைத்து வந்து பெண் கேட்பதாகவும் ஜெனிபர் சரோஜாவிடம் கூறியுள்ளார். பின்னர், அவரை நெல்லைக்கும் அனுப்பியுள்ளார்.

இதனிடையே, தனது காதலனைத் தேடி கள்ளக்குறிச்சி ஜெனிபர் சென்றது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, காதலை கைவிட்டு விடுமாறு பெற்றோர் சரோஜாவிடம் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், விஜய்யை திருமணம் செய்வதில் ஜெனிபர் உறுதியாக இருந்துள்ளார்.

Nellai Murder

இந்த நிலையில், கடந்த அக்டோபர் 28ஆம் தேதி சரோஜா வீட்டில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த நிலையில், தனது தங்கையின் தற்கொலை முயற்சிக்கு விஜய் தான் காரணம் என ஆத்திரமடைந்த அவரது அண்ணன் சிம்சன், விஜய்யை திருநெல்வேலிக்கு வருமாறும், வீட்டில் பேசி திருமணம் முடித்து வைப்பதாகவும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: இருங்க பாய்.. கோர்ட் வாசலில் தயாரிப்பாளர் சங்கம்.. ரிவீவ்களுக்கு நீதிமன்றம் தடாலடி பதில்!

இதனை நம்பிய விஜய், நெல்லைக்கு வந்துள்ளார். அப்போது விஜய்க்கும், சிம்சனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, சிம்சன் தனது நண்பர் சிவாவுடன் சேர்ந்து கட்டை, அரிவாள் உள்ளிட்ட பொருட்களால் விஜய்யை கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த விஜய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். இதனையடுத்து, இது குறித்து தகவல் அறிந்து சென்ற போலீசார், விஜய்யின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தடயங்களைச் சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட சிம்சன் மற்றும் சிவா ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Pushpa 2 Release and Reviews புஷ்பா 2 படத்தின் முதல் விமர்சனம்..பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
  • Views: - 83

    0

    0

    Leave a Reply