பங்குச்சந்தை மன்னன் முதல் மோசடி மன்னன் வரை : ஹர்ஷத் மேத்தா vs லக்கி பாஸ்கர்!
Author: Selvan3 December 2024, 3:43 pm
லக்கி பாஸ்கர் படத்தில் ஹர்ஷத் மேத்தா யார்?
துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த தீபாவளி அன்று வெளிவந்த திரைப்படம் லக்கி பாஸ்கர்.இதில் துல்கர் சல்மான்,ஒரு சாதாரண வங்கி ஊழியராக வேலைபார்க்கும் ஒரு நடுத்தர குடும்பத்தை சார்ந்தவர்.
தன்னுடைய குடும்ப வறுமை,வங்கியில் அவருக்கு நடந்த ஏமாற்றம்,கடன் பிரச்னை இதெல்லாம் மனதில் வைத்து ஓடிக்கொண்டிருக்கும் போது,திடீரென சிபிஐ அதிகாரிகளால் விசாரணைக்கு அழைக்கப்படுகிறார்.
அவருடைய வங்கி கணக்கில் 100 கோடி எப்படி உருவானது என்பதை விறுவிறுப்பாக காட்டும் திரைப்படம் தான் லக்கி பாஸ்கர்.இந்த மோசடி கதை ஹன்ஸால் மெக்ட்டா இயக்கிய “SCAM 1992: THE HANSAL MEHTA STORY” என்ற தொடரை அடிப்படையாக வைத்து இயக்குனர் கச்சிதமாக எடுத்துள்ளார்.
ஹர்ஷத் மேத்தாவின் சாம்ராஜ்யம்
இத்திரைப்படத்தில் இடம்பெறும் முக்கியக் கதாபாத்திரங்களில் ஒன்று ஹர்ஷத் மேத்தா. இவர் ஒரு நேரத்தில் இந்தியாவின் பங்குச்சந்தையின் “மாநகர கிங்” என்று அழைக்கப்பட்டார். 1980 மற்றும் 1990களில், பங்குச்சந்தையில் நிகழ்த்திய சாதனைகளால் மிகுந்த புகழை பெற்றார்.அதே நேரத்தில் அவர் பங்குச்சந்தை மோசடி வழக்கில் சிக்கினார்.
ஒரு நாளிதழால் முறிந்த வாழ்க்கை
1992-ல், ஒரு தேசிய நாளிதழான The Times of Indiaவில் சுசேதா தலால் என்ற பத்திரிகையாளர, ஹர்ஷத் மேத்தாவின் வர்த்தக மோசடியை வெளிக்கொண்டு வந்தது,ஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சியாக்கியது.
ஹர்ஷத் மேத்தா தன்னிடம் உள்ள பணத்தை வைத்து, தனக்கு தேவையான நிறுவனத்தின் பங்குகளை வாங்கி அப்பங்குகளின் சந்தை விலையை 40சதவீதம் போல் உயந்தது போல் காட்டி விடுவார்.பின்பு அதனை நம்பி பல முதலீட்டாளர்கள் அந்நிறுவனத்தின் பங்குகளை வாங்கிய பின்,தன்னுடைய பங்குகளை மொத்தமாக அதிக லாபத்திற்கு விற்று விடுவார்.
இதையும் படியுங்க: பிக் பாஸ் சீசன் 8ல் ஒருவர் தற்கொலை : என்ன நடந்தது..? போலீஸார் விசாரணையில் ஷாக்!
இதற்காக வங்கிகளில் போலி BR-களை தயாரித்து,பணத்தை வங்கியிடம் இருந்து தவறான முறையில் பெற்றுக்கொண்டார்.இதற்கு வங்கி அதிகாரிகளும் உடந்தையாக செயல்பட்டுள்ளனர்.
இதன் மூலம் அவரது நிதி மோசடியும், பல வங்கிகளுடனான தொடர்பும் புலனாய்வுக்கு வந்தன. இதனால், அவரது “சாம்ராஜ்யம்” முழுமையாக இடிந்து, பல லட்சம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை இழந்தார்.
பங்குச்சந்தை மோசடியின் விளைவு
ஹர்ஷத் மேத்தா மேற்கொண்ட மோசடி, 4000 கோடிக்கு மேல் என மதிப்பிடப்பட்டது.
இது இந்தியாவின் பங்குச்சந்தை வரலாற்றில் மிகப்பெரிய மோசடியாக கருதப்பட்டது.
1992 ஆம் ஆண்டில் நடந்த இந்த மிகப்பெரிய மோசடிக்கு பிறகு SEBI அமைப்பை கொண்டுவந்து பல புதிய விதிமுறைகள் கொண்டுவரப்பட்டன.
இவரை 1992 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தார்கள்.அதன் பின்பு உடல்நிலை சரியில்லாமல் 2001 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி சிறை வளாகத்திலேயே,தன்னுடைய 47வது வயதில் மரணம் அடைந்தார்.
லக்கி பாஸ்கர் படம் இத்தகைய நிஜ நிகழ்வுகளை தத்ரூபமாக மக்களுக்கு எளிதில் புரியும் விதத்தில் காட்டியுள்ளது.இப்படம் தற்போது OTT-யில் வெளியாகி கலக்கி வருகிறது.