அடேங்கப்பா..டிசம்பர் மாதத்தில் இத்தனை படங்களா..சினிமா ரசிகர்களுக்கு விருந்து..!
Author: Selvan3 December 2024, 5:02 pm
தமிழ் சினிமாவில் இந்த வருடம் பல படங்கள் வெளிவந்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.கங்குவா,இந்தியன் 2 போன்ற பெரிய படங்கள் தோல்வி அடைந்தாலும்,விஜயின் கோட்,ரஜினியின் வேட்டையன் போன்ற படங்கள் வெற்றிப்பெற்றது.
சிறிய பட்ஜெட்டில் அமைந்த வாழை மற்றும் லப்பர் பந்து திரைப்படமும் வசூலை அள்ளி ரசிகர்களை கவர்ந்தது .கடந்த மாதம் ராணுவ வீரரின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளிவந்த அமரன் திரைப்படம்,சிவகார்த்திகேயன் சினிமா வாழ்க்கையில் இதுவரை இல்லாத வரவேற்பை பெற்று தந்தது.
அந்த வகையில் இந்த வருடத்தின் இறுதி மாதமான டிசம்பரில் நிறைய படங்கள் திரைக்கு வர இருக்கின்றன.
டிசம்பர் 5:அல்லு அர்ஜுன் நடிப்பில் “புஷ்பா 2 தி ரூல்” பான் இந்திய அளவில் வெளியாகிறது.
டிசம்பர் 6:ஃபேமிலி, தூவல் படங்கள் வெளியாகின்றன.
டிசம்பர் 12:ரஜினிகாந்த் மற்றும் மம்முட்டி நடிப்பில் வெளியான மாஸ் படம் தளபதி ரீ-ரிலீசாக திரையிடப்படுகிறது.
டிசம்பர் 13:சித்தார்த் நடிப்பில் மிஸ் யூ,மிர்ச்சி சிவாவின் சூது கவ்வும் 2, தம்பி ராமையா மற்றும் சமுத்திரக்கனி நடித்த ராஜாகிளி போன்ற படங்கள் வருகின்றன.
டிசம்பர் 20:வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், சூரி நடித்த விடுதலை 2 படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெரும் என எதிர்பாக்கப்படுகிறது.
அதுகூடவே பாட்டில் ராதா மற்றும் திரு மாணிக்கம் ஆகிய படங்கள் வெளியாகின்றன.
டிசம்பர் 27:நாய்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட அலங்கு திரைப்படமும்
யோகி பாபு, இளங்கோ ஆகியோர் நடிப்பில் உருவான கஜானா படமும் வெளியாகிறது .
சினிமா ரசிகர்களுக்கு இந்த வருட இறுதியில் பல படங்கள் வெளியாகி சந்தோசத்தை ஏற்படுத்த உள்ளது.