சூடுபிடிக்கும் டிஜிட்டல் அரஸ்ட்.. பின்னணியில் சீனர்கள்.. நடப்பது என்ன?

Author: Hariharasudhan
4 December 2024, 12:27 pm

டிஜிட்டல் அரஸ்ட் தொடர்பாக ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை: சென்னை, திருவான்மியூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மத்திய அரசு அதிகாரி ஒருவரிடம், மும்பை போலீசில் இருந்து பேசுவதாகக் கூறி, ‘டிஜிட்டல் அரஸ்ட்’ மோசடி நடத்தி, 88 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த வழக்கில், அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த பிரதீம் போரா என்பவர் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி ஒரே நாளில் 3.82 கோடி ரூபாய் மோசடி செய்திருப்பதும், அந்தப் பணத்தை 178 வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி இருப்பதும் தெரிய வந்துள்ளது. எனவே, 178 வங்கி கணக்குகளையும் கண்டறிந்த சென்னை சைபர் கிரைம் போலீசார், அதை மீட்பதற்கு உரிய நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர்.

Four Assamese arrested in Digital Arrest

மேலும், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அஸ்ஸாம், கவுகாத்திக்குச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், பிரதீம் போரா உடன் இணைந்து டிஜிட்டல் அரஸ்ட் மோசடியில் ஈடுபட்டதாக துருபாஜோதி மஜிம்தார் (25), ஸ்வராஜ் பிரதான் (22), பிரசாந்த் கிரி (21) மற்றும் பிரஞ்ரல் ஹசாரிகா (28) ஆகிய 4 பேரை கைது செய்து உள்ளனர்.

What is Digital Arrest

தொடர்ந்து இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், டெல்லி, கொல்கத்தா, கேரளா, ஜெய்ப்பூர், மும்பை மற்றும் கோவா ஆகிய இடங்களில் உள்ள தங்களது முகவர்கள் மூலம், பொதுமக்களின் செல்போன் எண்கள் உள்ளிட்ட விவரங்களைப் பெற்றிருப்பதும், அந்த விவரங்கள் மூலம் பொதுமக்களை ஏமாற்றியும், மிரட்டியும் பணம் பெற்றுள்ளதும் தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: மனைவியை காரோடு எரித்துக் கொன்ற கணவர்.. நடுரோட்டில் பயங்கரம்!

மேலும், அந்தப் பணத்தை கம்போடியா, வியட்நாம், தைவான் மற்றும் பாங்காங் ஆகிய நாடுகளில் வசிக்கும் தங்களது சீன முதலாளிகளுக்கு அனுப்பி இருப்பதும், இதற்கான கமிஷன் தொகையை இவர்கள் பெற்றிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

  • Pushpa 2 Release and Reviews புஷ்பா 2 படத்தின் முதல் விமர்சனம்..பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
  • Views: - 57

    0

    0

    Leave a Reply