அனல் பறக்கும் புஷ்பா 2..படத்தின் திரைவிமர்சனம் இதோ..!

Author: Selvan
5 December 2024, 2:00 pm

புஷ்பா படத்தின் முதல் பாகம் வெளியாகி அனைவரையும் கவர்ந்து 1000 கோடி வசூலை அள்ளியது மட்டுமல்லாமல்,அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகரனுக்கான தேசிய விருதையும் வாங்கி தந்தது.

இதற்கிடையே பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 3 வருடம் கழித்து புஷ்பா 2 தி ரூல்,இன்று பான் இந்தியா அளவில் வெளியாகி ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்றுவருகிறது.

Allu Arjun Pushpa 2 review

ஒரு சாதாரண சந்தன மர கடத்தலாக இருந்த புஷ்பா எப்பிடி ஒரு சாம்ராஜ்ஜியத்தை கட்டி ஆளுகிறார் என்பதை தான் புஷ்பா 2 வின் கதையாக உருவெடுத்துள்ளது. அல்லு அர்ஜுன் சிவப்பு சந்தன சிண்டிகேட் சாம்ராஜ்யத்தின் முக்கிய தலைவராக மாறி, தனக்கென ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்குகிறார்.


எஸ்.பி. பன்வர் சிங் ஷெகாவத் நடித்திருக்கும் ஃபஹத் பாசில் ஒவ்வொரு முறையும் புஷ்பாவின் சிவப்பு சந்தன மரத்தை சட்டவிரோதமாக கொண்டு செல்வதை தடுக்க முயற்சிக்கிறார்.

Pushpa 2 box office collection


ஸ்ரீவள்ளியாக நடித்திருக்கும் ராஷ்மிகா மந்தனா புஷ்பா,முதல்வருடன் ஒரு புகைப்படம் எடுப்பதைப் பார்க்க ஆசைப்படுகிறார்,ஆனால் முதல்வர் புஷ்பா ராஜை ஒரு கடத்தல்காரர் என்று கூறி அவருடன் புகைப்படம் எடுக்க மறுக்கிறார்.

முதல்வரை நீக்கிவிட்டு தன்னுடைய சித்தப்பாவை அந்த பதவியில் அமர வைக்க புஷ்பா முடிவு செய்கிறார். அதே நேரத்தில் வெளிநாடு செல்லும் சிவப்பு சந்தன மர கட்டைகளை, பன்வர் சிங் ஷெகாவத் பிடிக்க முயற்சிக்கிறார்.அது நடந்தால், புஷ்பாவின் சாம்ராஜ்யத்திற்கு பெரிய ஆபத்து.

இதையும் படியுங்க: புஷ்பா 2 படத்தின் முதல் விமர்சனம்..பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

இந்த இரு பிரச்னைகளை எப்படி சமாளித்தார் புஷ்பராஜ்? அதன் பிறகு என்ன நடந்தது?
புஷ்பாவின் சாம்ராஜ்ஜியத்தை தடுக்க பன்வர் சிங் ஷெகாவத் என்னவெல்லாம் செய்தார்? புஷ்பா அவரை எப்படி வீழ்த்தினார்? புஷ்பாவின் கனவு எப்படி நனவாகியது? தனது மூத்த சகோதரரின் மகளை காப்பாற்ற மத்திய அமைச்சர் பிரதாப் ரெட்டியுடன் புஷ்பா ஏன் சண்டையிட்டார்? இதுதான் புஷ்பா 2 படத்தின் கதை.

Pushpa 2 The Rule review


வெறும் மாஸ் காட்சிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் , இரண்டாம் பாகத்தில் குடும்ப உணர்வுகளுக்கு இடம் கொடுத்திருக்கிறார் இயக்குனர் சுகுமார்.

புஷ்பா மற்றும் பன்வர் சிங் ஷெகாவத் வரும் காட்சிகள் அதிரடியாக மட்டுமல்லாமல், நகைச்சுவை கலந்து ரசிக்கும்படியாக உள்ளது.பன்வர் சிங்கின் உயரத்தை புஷ்பா பின்னுக்குத் தள்ளும் காட்சிகள் த்ரில்லிங்கானவை.

படத்தில் உணர்வுகள் மற்றும் பாடல்களுக்கு முக்கியத்துவம் இல்லை. பாடல்கள் வேண்டுமென்றே கதையில் புகுத்தப்பட்டிருப்பதாக தெரிகிறது.மொத்தத்தில் பக்கா வணீகரீதியாக புஷ்பா 2 தி ரூல் அமைந்துள்ளது.

  • Nayanthara and Vignesh Shivan viral video சோதிக்காதிங்கடா…விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விக்னேஷ் சிவன்…வைரலாகும் இன்ஸ்டா பதிவு..!
  • Views: - 214

    0

    0

    Leave a Reply