அமரன் பட வெற்றியால் தலைக்கனம்.. பிரபல இயக்குநருடன் படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் மோதல்?
Author: Udayachandran RadhaKrishnan5 December 2024, 2:45 pm
கடின உழைப்பாளியான சிவகார்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாகியுள்ளார். அதற்கு ஒரே ஒரு காரணம் அமரன் திரைப்படத்தின் வெற்றிதான்.
சுமார் 350 கோடி ரூபாய்க்கும் மேல் படம் வசூலித்துள்ளது. இதனால் மகிழ்ச்சியின் உச்சத்தில் படக்குழு உள்ளது. இதனிடையே அமரன் பட வெற்றியால் தனது சம்பளததை ரூ.60 கோடி என எஸ்கே அறிவித்துள்ளார்.
இது ஒரு புறம் இருக்க, சிவகார்த்திகேயன் தற்போது ஏஆர் முருகதாஸ், டான் பட இயக்குநர் மற்றும் சுதா கொங்கராவின் புறநானூறு படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் புறநானூறு படப்பிடிப்பில் பங்கேற்க சென்ற சிவகார்த்திகேயன் அதிக தாடியுடன் வந்ததால் இயக்குநர் கடுப்பாகியுள்ளார்
இதையும் படியுங்க: சூரிக்கு ஜோடியாகும் பிரபல நடிகை… வாழ்க்கை ஒரு வட்டம் என்பது சரிதான் போல!
தாடியை எடுத்துவிட்டு வர சொன்னதாகவும், கடுப்பாகி படப்பிடிப்பில் இருந்து பாதியிலேயே சிவா கிளம்பியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து வலைப்பேச்சு பிஸ்மி, அமரன் படம் தந்த வெற்றியால் சுதா கொங்கராவை லேசாக சிவகார்த்திகேயன் நினைத்து விட்டார். பெரிய இயக்குநர்கள் படத்தில் நடிக்க சிவா விருப்பப்படுவதாகவும், அதனால் சின்ன சின்ன படங்களில் நடிக்க அவர் பிகு பண்ணிக் கொள்வதாக கோலிவுட்டில் தகவல் உலாவுவதாக அவர் கூறியுள்ளார்.