வாரம் ஒரு பழம் சாப்பிட்டா போதும்… ஹெல்த் வேற லெவெலா இருக்கும்!!!

Author: Hemalatha Ramkumar
5 December 2024, 5:40 pm

அவகாடோ பழம் என்பது மிகவும் பாதுகாப்பான, ஆரோக்கியமான அதே நேரத்தில் நம்முடைய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு உதவும் ஒரு எளிமையான வழி. இந்த பச்சை நிற பழத்தில் ஆரோக்கியமான மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் இருப்பதன் காரணமாக இது நம்முடைய இதய ஆரோக்கியத்திற்கு பலன் அளிக்கிறது மற்றும் இயற்கையான முறையில் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது. கூடுதலாக அவகாடோ பழத்தில் காணப்படும் அதிக அளவு நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவி, ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்கிறது. இந்த பழம் வைட்டமின் K, வைட்டமின் E, பொட்டாசியம் மற்றும் ஃபோலேட் போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் மினரல்களின் சிறந்த மூலமாக கருதப்படுகிறது. 

இந்த வைட்டமின்களும் மினரல்களும் ஆரோக்கியமான சருமம், வலிமையான எலும்புகள் மற்றும் சிறந்த நோய் எதிர்ப்பு செயல்பாட்டை உறுதி செய்கிறது. மேலும் அவகாடோ பழங்களில் காணப்படும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் செல்களை சேதத்தில் இருந்து பாதுகாத்து, நம்முடைய உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கிறது. இந்த பலன்கள் அனைத்தையும் மனதில் வைத்துக் கொண்டு வாரம் ஒரே ஒரு அவகாடோ பழத்தை வழக்கமான முறையில் சாப்பிட்டு வந்தால் நிச்சயமாக உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.

உடல் எடை கட்டுப்பாடு

அவகாடோ பழங்கள் அதிக கலோரி கொண்டவை என்பதால் இது உடல் எடையை கட்டுப்படுத்துவதற்கு பெரிதும் உதவுகிறது. ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த அவகாடோ பழங்கள் நம்முடைய பசியை கட்டுப்படுத்தி, வயிறு நிரம்பிய உணர்வை அளிக்கிறது. இதனால் நாம் அதிக அளவு கலோரிகள் எடுத்துக் கொள்வது தவிர்க்கப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: இரவு மேக்கப்பை அகற்றும் போது மறக்காம இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணிக்கோங்க!!!

எலும்பு ஆரோக்கியம்

வைட்டமின் K, காப்பர் மற்றும் ஃபோலேட் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் சிறந்த இயற்கை மூலமாக அமையும் அவகாடோ பழம் வலிமையான மற்றும் ஆரோக்கியமான எலும்புகளை பராமரிப்பதில் முக்கிய பங்கு கொண்டுள்ளது.

மூளை ஆரோக்கியம்

ஆரோக்கியமான கொழுப்புகளால் நிறைந்த அவகாடோ பழம் மூளை செயல்பாடு மற்றும் அறிவுத்திறன் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும் இது நரம்பு செயல்பாடு சரியான முறையில் நடைபெறுவதற்கும் உதவுகிறது.

ஆரோக்கியமான சருமம்

அவகாடோ பழங்களில் உள்ள மாய்சரைசிங் பண்புகளின் காரணமாக இது பல்வேறு சரும பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது. இதில் உள்ள வைட்டமின்களும் ஆன்டி-ஆக்சிடன்ட்களும் சருமத்தின் நெகிழ்வுத் தன்மையை மேம்படுத்தி வயதான அறிகுறிகளை குறைக்கிறது.

மன அழுத்தத்தில் இருந்து நிவாரணம் 

அவகோடா பழங்களில் B வைட்டமின்கள் அதிகமாக இருப்பதால் இது நரம்பு அமைப்பின் ஆரோக்கியத்தை உறுதி செய்து, மன அழுத்தத்தை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Angadi Theru actor Mahesh career அட இதெல்லாம் இவர் நடிக்க இருந்த படமா…கைக்கு வந்த வாய்ப்பை தவற விட்டு தவிக்கும் அங்காடித்தெரு ஹீரோ…!