சொத்துக்களை அனாதை இல்லத்திற்கு எழுதி வைக்க சூப்பர் ஸ்டார் முடிவு.. அதிர்ச்சியில் குடும்பம்!
Author: Udayachandran RadhaKrishnan5 December 2024, 5:52 pm
சொத்துக்களை எல்லாம் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்திற்கு எழுதி வைக்க சூப்பர் ஸ்டார் முடிவு செய்துள்ள சம்பவம் அக்குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சொத்துக்களை அனாதை இல்லத்திற்கு எழுதி வைக்கும் கன்னட சூப்பர் ஸ்டார்
கன்னட சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருந்தவர் ராஜ்குமார். இவரது மகன்கள் சிவ ராஜ்குமார் மற்றும் புனித் ராஜ்குமார் இருவரும் சினிமாவில் ஜொலித்தனர்.
இதில் ஏழைகளுக்கு சேவை செய்த புனித் ராஜ்குமார் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். சிவராஜ்குமார் முன்னணி நடிகராக உள்ள நிலையில் அண்மையில் அவருக்கு புற்று நோய் உள்ளதாக தகவல் பரவியது.
இதையும் படியுங்க: அமரன் பட வெற்றியால் தலைக்கனம்.. பிரபல இயக்குநருடன் படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் மோதல்?
இதையடுத்து உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். இது குறித்து பேசிய அவர், தனக்கு நோய் உள்ளது உண்மைதான் அதற்காக நான அமெரிக்கா வெசல்வது உண்மை என கூறியுள்ளார். இருந்தாலும் அது புற்றுநோய் என்பது இன்னும் முடிவாகவில்லை, எனவே ரசிகர்கள் பதற்றம் அடைய வேண்டாம் என கூறியுள்ளார்.

அமெரிக்கா செல்ல உள்ளதால் சிவராஜ்குமார் கமிட் ஆன படங்களில் இருந்து விலகியுள்ளார். இது குறித்து வலைப்பேச்சு அந்தணன் பேசும் போது, புனித் ராஜ்குமாரை விட சிவராஜ்குமார் தற்போது வேறொரு நல்ல முடிவை எடுத்துள்ளார்.
தந்தை ராஜ்குமார் மறைந்த போது சொத்துக்களை சரிபாதியாக எழுதியிருந்தனர். தற்போது தந்தை சம்பாதித்த சொத்தில் இருந்து எந்த பங்கும் எனக்கு வேண்டாம், அந்த சொத்துக்கள் முழுவதையும் அனாதை ஆசிரமங்களுக்கு எழுதி வைத்து விடுங்கள். நான் சம்பாதித்தது மட்டும் எனக்கு போதும் என கூறியுள்ளார். இது எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.