பிரபல இயக்குனரின் வீட்டில் சூழ்ந்த சோகம்.. ஓடோடி வந்த திரையுலகம்!

Author: Hariharasudhan
5 December 2024, 6:54 pm

எவர்கிரீன் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரின் தாயார் ருக்மணி அம்மாள் வயதுமூப்பு காரணமாக நேற்று காலமானார்.

சென்னை: தமிழ் சினிமாவின் எவர்கிரீன் இயக்குனர்களில் ஒருவராக அறியப்படுபவர் கே.எஸ்.ரவிக்குமார். இவரது தாயார் ருக்மணி அம்மாள். இவர் வயது மூப்பு காரணமாக நேற்று (டிச.04) காலமானார். 1936ஆம் ஆண்டி பிப்ரவரி 14 அன்று பிறந்த ருக்மணி அம்மாளுக்கு வயது 88. இந்த சோக நிகழ்வை இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தனது சமூக வலைத்தளத்தின் மூலம் உறுதிப்படுத்தி உள்ளார்.

தமிழ் சினிமா வரலாற்றில் 1990களில் தொடங்கி, சுமார் 30 ஆண்டுகளாக வெற்றி இயக்குனராகத் திகழ்ந்தவர் கே.எஸ். ரவிக்குமார். இவரது இயக்கத்தில் வெளியான பல படங்கள் வெள்ளி விழாவை ருசித்துள்ளது. அதிலும், பல நடிகர்கள் இவரது இயக்கத்தில் நடித்த பின்னர், முன்னணி நடிகர்களாகவும் மாறியுள்ளனர்.

KS Ravikumar mother Rukmani Ammal passes away

குறிப்பாக, சரத்குமாரின் நட்புக்காக, நாட்டாமை, ரஜினிகாந்த் உடன் முத்து, படையப்பா, கமல்ஹாசன் உடன் அவ்வை சண்முகி, தெனாலி, பஞ்சதந்திரம், தசாவதாரம், விஜய் உடன் மின்சார கண்ணா, அஜித்குமார் உடன் வில்லன், வரலாறு மற்றும் நவரச நாயகன் கார்த்திக் உடன் பிஸ்தா ஆகிய படங்கள் இன்றளவும் ரசிக்கப்பட்டு வருகின்றன.

KS Ravikumar mother Rukmani Ammal passed away

மேலும், 1990ஆம் ஆண்டில் ரகுமான் நடிப்பில் வெளியான ‘புரியாத புதிர்’ என்ற திரைப்படத்தை முதன் முதலில் இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படம் குறைந்த செலவில், குறுகிய காலத்துக்குள் எடுக்கப்பட்ட படமாக நல்ல விமர்சனத்தைப் பெற்றது. தமிழ் சினிமாவில் தரமான த்ரில்லர் படங்களுள் முக்கியமான படமாகவும் இது கருதப்படுகிறது.

இதையும் படிங்க: சொத்துக்களை அனாதை இல்லத்திற்கு எழுதி வைக்க சூப்பர் ஸ்டார் முடிவு.. அதிர்ச்சியில் குடும்பம்!

இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக படங்கள் இயக்குவதை விட, படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அதிலும், குணச்சித்திர கதாபாத்திரங்கள் தற்போது அவரது வாசலைத் தட்டுகிறது. அது மட்டுமின்றி, அவ்வப்போது நேர்காணல்களிலும் தலையைக் காட்டி வருகிறார்.

  • Vishal health concerns viral video விஷாலுக்கு FIRST என்ன பிரச்சனைன்னு தெரியுமா…ரசிகர் மன்றம் வெளியிட்ட திடீர் அறிக்கை…!
  • Views: - 240

    0

    0