ஓடையில் பெண் சடலத்தை புதைக்க முயற்சி.. திரண்டு வந்த போலீஸ் : கோவையில் பரபரப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
6 December 2024, 12:00 pm

கோவை பெரியநாயக்கன் பாளையம் அடுத்து உள்ள வெள்ளமடை ஊராட்சிக்கு உட்பட்ட காளிபாளையம் பகுதியை சேர்ந்த ஜெய்தீன் பீபி (90). இவர் உடல நலக்குறைவால் தனது வீட்டில் இன்று இறந்து உள்ளார்.

இவரது உறவினர்கள் காளிபாளையத்தில் மயானம் என்று கூறப்படும் இடத்தில் உடலை அடக்கம் செய்ய குழி தோண்டி உள்ளனர். அந்த மயானம் அரசுக்கு சொந்தமான ஓடை புறம்போக்கு இடம் என்றும், இந்த இடத்தில் உடலை புதைக்க கூடாது என்றும் அரசு வருவாய் துறையினர் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த மக்கள், தோட்ட உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து குழியை மூட வேண்டும் என்று கூறினர்.

இதையும் படியுங்க: முதல் நாளே இத்தனை கோடி வசூலா? மிரட்டி விட்ட புஷ்பா 2.!!

மேலும் இந்த இடத்தை நடைபாதையாக உபயோகித்து கொள்ள முடியுமே தவிர இறந்தவர்கள் உடலை புதைக்க அனுமதிக்க முடியாது என்று வருவாய்த் துறையினர் தெரிவித்தனர். ஆனால் அங்கு இருந்த இஸ்லாமிய மக்கள் இந்த இடத்தில் தான் பல வருடங்களாக இறந்தவர்களின் உடலை புதைத்து வருவதாக தெரிவித்தனர். இதனால் இந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.

attempt to bury Woman body in river

தொடர்ந்து அங்கு வந்த அன்னூர் தாசில்தார், பெரியநாயக்கன் பாளையம் டி.எஸ்.பி உள்ளிட்ட அதிகாரிகள் இஸ்லாமிய மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தகவல் அறிந்து அங்கு இந்து முன்னணியை சேர்ந்தவர்களும் திரண்டதால் பதட்டம் அதிகரித்து உள்ளது. தொடர்ந்து 200 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • Joshua Sridhar music journey இதெல்லாம் ஒரு இசையா…காது கொடுத்து கேட்க முடியல…பிரபல இசையமைப்பாளர் கொந்தளிப்பு..!
  • Views: - 109

    0

    0