லக்கி பாஸ்கர் பாணியில் உருவான 5 மோசடி திரில் படங்கள்…மிஸ் பண்ணாம பாருங்க..!

Author: Selvan
6 December 2024, 2:47 pm

உச்ச கட்ட த்ரில், நிதி மோசடி, மற்றும் ஆற்றல் மிக்க கதைகளை விரும்பும் நபரா? லக்கி பாஸ்கர் கதையை போன்ற திகிலான தருணங்களை கொண்ட சில திரைப்படங்கள் இதோ!

தி வுல்ஃப் ஆஃப் வால்ஸ்ட்ரீட்

The Wolf of Wall Street movie story

மார்டின் ஸ்கோர்சேஸின் இயக்கத்தில் ஜோர்டன் பெல்ஃபார்ட் என்ற பங்குச் சந்தை முகவரின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டு,இப்படம் 2013-ல் வெளியானது . லியோனார்டோ டிகாப்ரியோ நடித்துள்ள இப்படம் மோசடிகளும்,பாசாங்குகளும் நிறைந்த வாழ்க்கையின் உச்சங்களை சித்தரிக்கிறது.

ஸ்காம் 1992

harshad mehta life story

இது ஒரு சீரியஸ் தொடராக உருவானது ,1990களில் இந்திய பங்குச் சந்தையை அதிரவைத்த ஹர்ஷத் மேத்தாவின் உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. நுட்பமான கதையாடல் மற்றும் பிரமாதமான நடிப்பால்,இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.இப்படத்தின் கதையை வைத்து,தற்போது துல்கர் சல்மான் நடிப்பில் லக்கி பாஸ்கர் படம் உருவாகியுள்ளது.

இதையும் படியுங்க: மணக்கோலத்தில் நடிகர் காளிதாஸ் ஜெயராம் :விரைவில் டும் டும்…வைரலாகும் ப்ரீ வெட்டிங் வீடியோ..!

பஜார்

Baazaar hindi movie

இந்திய பங்குச் சந்தையின் மோசடி மற்றும் சவால்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட பாலிவுட் திரில்லர் திரைப்படம் இது.உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள், விரைவான லாபம் ஈட்டும் இறுதி நோக்கத்துடன் பங்குகளில் முதலீடு செய்கிறார்கள். ஷேர் மார்க்கெட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படமாகும், மேலும் இது பணத்தின் மீதுள்ள ஒழுக்கத்தை முன்வைக்கிறது.நடிகர் சாய்ஃப் அலி கானின் சுவாரஸ்யமான நடிப்புடன் நிதி உலகத்தின் இருண்ட தருபங்களை தத்ரூபமாக காட்டுகிறது.

மார்ஜின் கால்

margin call movie

2008 ஆம் ஆண்டு நிதி மந்தை அழிவின் தொடக்கத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம் நிறுவனத்தின் நெறிமுறைகள் மற்றும் பெரும் நஷ்டத்தின் பின்னணியை உணர்த்துகிறது.இது ஒரு அமெரிக்க படமாக 2011-ல் வெளிவந்தது.கேவின் ஸ்பேசி மற்றும் பால் பெட்டனி போன்ற நடிகர்கள் சிறப்பாக நடித்திருப்பார்கள்.

தி பிக் புல்

ஹர்ஷத் மேத்தாவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான மற்றொரு படம் இது. அபிஷேக் பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் இந்திய நிதி உலகில் கொடிக்கட்டி பறந்தவர்களின் கனவுகளைப் பேசும் படமாக அமைந்திருக்கும்.

  • Kalakalappu 3 Update சுட சுட வேலையில் சுந்தர் சி…கலகலப்பு 3-யின் கலக்கல் அப்டேட் வெளியீடு..!