அரசியல் தலைவராக முதல் நிகழ்ச்சி.. உற்று நோக்கிய கண்கள் : விஜய் செய்த செயல்..!!
Author: Udayachandran RadhaKrishnan6 December 2024, 6:47 pm
பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடைய விஜய் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார். தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கிய பின் அவர் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி இதுதான்.
சென்னை நந்தம்பாக்கத்தில் நடந்து வரும் எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய் பங்கேற்றார்.
இந்த நிகழ்வை திருமாவளவன் புறக்கணித்துள்ளார். தற்போதுள்ள அரசியல் சூழலில் இந்த நிகழ்ச்சியை புறக்கணிப்பதாக திருமாவளவன் ஓபனாக கூறினார்.
இதையும் படியுங்க: என் தம்பி விஜய் செய்தது சரிதான் : பிரேமலதா அறைகூவல்!
இதையடுத்து நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்றார். எப்போதும் போல வெள்ளை சட்டை, சேண்டர் கலர் பேண்ட் அணிந்தவாறு வந்திருந்தார்.
அவர் வந்த உடன் அரங்கமே அவரை உற்று நோக்கியது. தொடர்ந்து அரங்கில் இருந்த அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த விஜய், சிலையுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.
பின்னர் மேளம் அடித்த கலைஞர்களுடன் இணைந்து அவரும் மேளம் அடித்தார். இது தொடர்பான புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.