குளிர்காலத்தில் தலைமுடி அதிகமாக உதிர காரணம் என்னவா இருக்கும்…???
Author: Hemalatha Ramkumar7 December 2024, 10:37 am
குளிர்ந்த காற்று மற்றும் குறைவான ஈரப்பதம் ஆகியவற்றுடன் குளிர் காலத்தில் தலைமுடி உதிர்வு அதிகமாகிறது. பெரும்பாலான நபர்களுக்கு இந்த சீசனில் ஏற்படக்கூடிய பொதுவான பிரச்சனை இது. குளிர்காலத்தில் தலைமுடி எதனால் உதிர்கிறது என்பதை தெரிந்து கொண்டு, அதனை எப்படி கையாளுவது என்பதை தெரிந்து கொள்வது உங்களுடைய தலைமுடி ஆரோக்கியத்தை பராமரித்துக் கொள்வதற்கு உதவும்.
குளிர் காலத்தில் ஏன் தலைமுடி உதிர்வு பிரச்சினை அதிகமாகிறது? குளிர்காலம் என்பது தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு ஒரு நண்பரை போல செயல்படுகிறது. வறண்ட காற்று மற்றும் வீட்டிற்குள் இருக்கும் சூடு தலைமுடியில் உள்ள ஈரப்பதத்தை வெளியேற்றி மயிர்க்கால்களை வறண்டதாகவும், வெள்ளை நிற திட்டுக்கள் கொண்டதாகவும் மாற்றுகிறது. இதனால் இயற்கை எண்ணெய் தலைமுடி வேர்களில் இருந்து வெளியேறுகிறது. அதுமட்டுமல்லாமல் தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமான வைட்டமின் D உற்பத்தியும் குளிர்காலத்தில் குறைகிறது. இதனால் குளிர் காலத்தில் தலைமுடி வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. இவை அனைத்தும் இணைந்து குளிர்ந்த வானிலையில் தலைமுடி மெலிந்து போவதற்கு காரணமாக அமைகின்றன.
குளிர் காலத்தில் தலை முடி உதிர்வு ஏற்படாமல் தடுப்பது எப்படி? வறட்சியை எதிர்த்து போராடுவதற்கு மாய்ஸ்ரைசிங் ஷாம்பூ மற்றும் கண்டிஷனர் பயன்படுத்துவது அவசியம். வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரு முறை தேங்காய் எண்ணெய், ஆர்கான் அல்லது பாதாம் எண்ணெய் பயன்படுத்தி தலைமுடிக்கு மசாஜ் செய்யுங்கள். இது உங்களுடைய தலைமுடி வேர்களை ஈரப்பதத்தோடு வைத்து, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். ஆனால் இரவு முழுவதும் தலைமுடியில் எண்ணெயை அப்படியே விட்டுவிடுவது நல்லதல்ல. 2 முதல் 3 மணி நேரம் ஊற வைத்து தலை முடியை அலசுவது பரிந்துரைக்கப்படுகிறது.
வெந்நீரில் குளிப்பது மயிர்க்கால்களில் உள்ள இயற்கை எண்ணெய்களை அகற்றி விடலாம். இதனால் தலைமுடி இன்னும் வரண்டதாக மாறி தலைமுடி உதிர்வு ஏற்படும். எனவே வெந்நீரில் குளிப்பதை தவிர்த்து விட்டு, வெதுவெதுப்பான தண்ணீரில் தலைமுடியை அலசுவது அதனை இயற்கையாக ஈரப்பதத்தோடு வைத்திருக்கும்.
தலைமுடியின் ஆரோக்கியத்தை உட்புறத்தில் இருந்து கவனித்துக் கொள்வதற்கு அதிக வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்த உணவை சாப்பிடுவது அவசியம். அதிலும் குறிப்பாக வைட்டமின் D, பயோட்டின் மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளான முட்டை, நட்ஸ் வகைகள், கீரை மற்றும் எண்ணெய் மீன்கள் போன்றவற்றை சாப்பிடுங்கள்.
இதையும் படிச்சு பாருங்க: நண்டு மிளகு பிரட்டல் ரெசிபி: டேஸ்டு சும்மா அள்ளும்!!!
வீட்டை விட்டு வெளியே செல்லும் பொழுது உங்களுடைய தலைமுடியை குளிர்ந்த காற்றில் இருந்து பாதுகாப்பதற்கு ஸ்காஃர்ப் அல்லது தொப்பி அணியவும். மேலும் பட்டு அல்லது சாட்டைன் துணியாலான தொப்பிகளை அணிவது உராய்வை குறைத்து, தலைமுடி உடைந்து போவதையும் முடி உதிர்வையும் தடுக்கும்.
குளிர் காலத்தில் நம்மில் பெரும்பாலானவர்கள் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதில்லை. ஆனால் எந்த வானிலையாக இருந்தாலும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். வீட்டிற்குள் உள்ள ஈரப்பதத்தை அதிகரிப்பதற்கு ஹியூமிடிஃபையர் பயன்படுத்துவது உதவும்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.