ராம்கி வாழ்க்கையில் நடந்த அவமானம்…லக்கி பாஸ்கர் படத்திற்கு பிறகு வெளிவந்த உண்மை..!

Author: Selvan
7 December 2024, 1:53 pm

ராம்கியின் சினிமா வாழ்க்கை

நடிகர் ராம்கி, தனது நடிப்புத் திறமையால் 80களின் இறுதியிலிருந்து 90களின் மத்தியில் தமிழ் சினிமாவில் முத்திரை பதித்தவர். சமீபத்தில் லக்கி பாஸ்கர் படத்தில் , அந்தோணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றுள்ளார்.

Ramki in Lucky Bhaskar


லக்கி பாஸ்கர் திரைப்படத்தில் பாஸ்கரை அவருடைய வங்கி ஊழியர்கள் எப்படியெல்லாம் அவமானப்படுத்தினார்களோ,அதே மாதிரி என்னுடைய சினிமா வாழ்க்கையிலும் ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்தது என்று சமீபத்திய பேட்டியில் கூறியிருப்பார்.

இதையும் படியுங்க: அந்தரங்க காட்சி கசிந்தது.. இணையத்தில் தீயாய் பரவும் Pragya Nagra படுக்கை அறை வீடியோ!

அவமானத்தை சந்தித்த நேரம்

அதாவது ராம்கியின் குடும்பத்தில் அனைவரும் அரசு அதிகாரிகளாக இருந்தாலும், அவர் சினிமா துறையில் இடம் பிடிக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தார். “சின்ன பூவே மெல்ல பேசு” என்ற திரைப்படத்தின் மூலம் அவர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது . அந்த படத்தில் இவர் கூட பிரபு முக்கிய நடிகராக நடித்திருப்பார்,படமும் மாஸ் ஹிட் ஆனது.

Actor Ramki early days


அந்த படத்தின் 125வது நாள் விழா கொண்டாட்டத்தில்,ராம்கியை பல பேருக்கு தெரியாததால் அவரை மேடை ஏற அனுமதிக்கப்படாமல் அவமானப்படுத்தினார்கள். பின்னர், போலீஸ்காரர்களின் உதவியுடன் மேடைக்கு சென்றார். இந்த மோசமான அனுபவம் அவரை சினிமாவில் எப்படியாவது வெற்றிப்பெற வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டியது.


பல வருடங்கள் கழித்து அதே மேடைக்கு காரில் சென்ற போது,அங்கே இருந்தவர்கள் என்னை பார்த்து வணக்கம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்,இந்த அனுபவம் எனக்கு ஒருபக்கம் கஷ்டத்தையும் மறுபக்கம் வெற்றியையும் கற்றுக்கொடுத்தது. “அவமானத்தால் நான்,இன்று மிக பெரிய வெற்றியாளராகி இருக்கிறேன் ” என்று ராம்கி கூறியிருப்பார்.

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!