மஜாவா மேளம் வாசித்த விஜய் :பட்டைய கிளப்பும் வீடியோ..கொண்டாட்டத்தில் தளபதி ரசிகர்கள்..!

Author: Selvan
7 December 2024, 2:46 pm

அம்பேத்கர் புத்தக வெளியீடு

நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய், அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.இது அவரது அரசியல் கட்சியை ஆரம்பித்த பின் முதலாவது பொதுவெளி நிகழ்வாக இருந்தது என்பதால் ரசிகர்களிடமும் அரசியல் வட்டாரத்திலும் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது.

Ambedkar Book Release


மேள தாளம் வாசித்த விஜய்

விழா இடத்தில் விஜயை வரவேற்கும் விதமாக மேள தாளம் வாசிக்கப்பட்டது. அதில் விஜய் இணைந்து மேள வாசித்தது,நிகழ்ச்சியயை இன்னும் களைகட்டியது.அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி ரசிகர்களை குஷிப்படுத்தியது.


விழாவில் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விஜய்க்கு உற்சாக ஆதரவை வெளிப்படுத்தினர்.

நிகழ்ச்சியில் முதலில், நடிகர் விஜய் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அந்த சிலையுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.

இதையும் படியுங்க: ராம்கி வாழ்க்கையில் நடந்த அவமானம்…லக்கி பாஸ்கர் படத்திற்கு பிறகு வெளிவந்த உண்மை..!

விகடன் குழுமம் தொகுத்து வெளியிட்ட “எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்” புத்தகம் நடிகர் விஜயால் வெளியிடப்பட்டது. அந்த புத்தகத்தை ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு மற்றும் அம்பேத்கர் பேரனுக்கு வழங்கினார்.


விழாவில் விஜயின் வருகை, அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்துதல், மேள வாசித்தது ஆகியவை தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி, விஜயின் அரசியல் பயணத்தை மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளது.

  • sr prabhu reply for comments on actor shri health issues விஷயம் தெரியாம பேசுறவங்க “Beep”… ஸ்ரீ விவகாரத்தில் அசிங்கமாக திட்டிய தயாரிப்பாளர்!