உட்கார்ந்து கொண்டே தொப்பை கொழுப்பை குறைக்க நச்சுன்னு நாலு வழி இருக்கு… கேட்க நீங்க தயாரா…???
Author: Hemalatha Ramkumar7 December 2024, 3:40 pm
இன்றைய காலகட்டத்தில் பலர் தொப்பை கொழுப்பு பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனர். அதனை குறைப்பதற்கு எளிமையான வழிகளை தேடிய வண்ணம் உள்ளனர். கடுமையான உடற்பயிற்சிகளை செய்யாமலேயே தொப்பை கொழுப்பை எப்படி குறைப்பது என்பது அவர்களுடைய கேள்வியாக இருக்கிறது. ஆனால் வீட்டில் உட்கார்ந்தபடியே உடலில் உள்ள அதிகப்படியான எடையை உங்களால் குறைக்க முடியும் என்று சொன்னால் நம்புவீர்களா? இது கேட்பதற்கு ஆச்சரியமாக இருந்தாலும் இதற்கான பதில், ஆம் உங்களால் முடியும். உங்களுடைய அன்றாட வழக்கத்தில் ஒரு சில பழக்கங்களை சேர்ப்பதன் மூலமாக உங்கள் தொப்பை கொழுப்பை மிக எளிதாக குறைக்கலாம்.
தொப்பை கொழுப்பு என்பது உங்களுடைய தோற்றத்தை பாதிப்பது மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திற்கும் மோசமான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். உதாரணமாக தொப்பை கொழுப்பின் விளைவாக இதய நோய், டயாபடீஸ் மற்றும் பிற மெட்டபாலிசம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. இன்றைய நவீன உலகில் பல ஆண்கள் அல்லது பெண்கள் நீண்ட நேரத்திற்கு ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்க்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது தவிர்க்க முடியாததாகவும் மாறிவிட்டது. எனவே உட்காந்து கொண்டே உங்கள் தொப்பை கொழுப்பை குறைப்பது எப்படி என்பதற்கான எளிமையான வழிகளை இப்போது பார்க்கலாம்.
உட்கார்ந்து செய்யும் உடற்பயிற்சிகள்
உட்கார்ந்து கொண்டே உடல் எடையை குறைப்பதற்கு இருக்கும் மிகவும் எளிமையான வழிகளில் இதுவும் ஒன்று. ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு இந்த உடற்பயிற்சிகளை நீங்கள் செய்யலாம். உதாரணமாக, டம்மி ட்விஸ்ட், சிஸர்ஸ், லெக் லிஃப்ட் மற்றும் சீட்டு கரன்சஸ்.
வீட்டு வேலைகளை செய்யவும்
பலர் வீட்டு வேலைகள் உடற்பயிற்சிகள் கணக்கில் சேராது என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் வீட்டு வேலை என்பது கலோரிகளை எரிப்பதற்கு ஒரு சிறந்த வழி. வீட்டை சுத்தம் செய்வது, தூசு தட்டுவது, கதவுகள் அல்லது ஜன்னல்களை கழுவுவது போன்றவை போன்றவற்றை தினமும் செய்யும்பொழுது நாளடைவில் உங்களுடைய தொப்பை கொழுப்பு குறைவதை நீங்கள் கவனிக்கலாம்.
இதையும் படிச்சு பாருங்க:
குளிர்காலத்தில் தலைமுடி அதிகமாக உதிர காரணம் என்னவா இருக்கும்…???
போதுமான அளவு தண்ணீர்
தண்ணீர் என்பது நமது உடலில் உள்ள கழிவுகளை அகற்றுவதற்கு மிகவும் அவசியம். இது தொப்பை கொழுப்பை குறைப்பதற்கு உதவும். எனவே நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
அதிக காய்கறிகளை சாப்பிடவும்
பல வண்ணங்களில் உள்ள காய்கறிகளை உங்களுடைய உணவில் சேர்த்து சாப்பிடுவது சிறந்த முடிவுகளை அளிக்கும். ஒரு நாளைக்கு மூன்று நேர உணவுக்கு பதிலாக சிறிய மற்றும் அடிக்கடி உணவு சாப்பிடுவது உங்களை நீண்ட நேரத்திற்கு வயிறு நிரம்பிய உணர்வோடு வைத்து அதிக உணவு சாப்பிடுவதையும் தவிர்க்கும்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.