கோபத்தின் உச்சியில் ஏ.ஆர்.ரகுமான் மகள்..ரசிகர்களை எச்சரித்து பதிவு வெளியீடு..!
Author: Selvan7 December 2024, 4:17 pm
சினிமாவை விட்டு விலகுகிறாரா ரகுமான்?
சில நாட்களுக்கு முன்பு ஏ.ஆர்.ரகுமானும்,அவரது மனைவி சாய்ரா பானுவும் பிரிவதாக கூறி ஒட்டுமொத்த திரையுலக ரசிகர்களை அதிர்ச்சியாக்கினர்.அதன் பின்பு ஏ.ஆர் ரகுமான் பற்றி தவறான கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் உலா வந்தன.
இதனால் ஏ ஆர் ரகுமான் பற்றி அவதூறு கருத்துக்களை பரப்பினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அவருடைய வழக்கறிஞர் அறிவித்தார்.
இதையும் படியுங்க: மஜாவா மேளம் வாசித்த விஜய் :பட்டைய கிளப்பும் வீடியோ..கொண்டாட்டத்தில் தளபதி ரசிகர்கள்..!
ஏ.ஆர் ரகுமான் மனைவியும்,நாங்கள் எதற்காக பிரிந்தோம் என்று ஒரு ஆடியோவை தனியார் சேனலுக்கு பகிர்ந்து,அதில் ரகுமான் நல்ல மனிதர் அவர் தான்,எனக்கு உலகில் சிறந்த மனிதர்.அவரை பற்றி யாரும் தவறா பேச வேண்டாம் என கூறியிருந்தார்.
தற்போது ஏ ஆர் ரகுமான் சினிமாவை விட்டு விலகுவதாகவும்,அவர் இனி எந்த பாடலுக்கும் இசையமைக்க போவதில்லை என்ற கருத்துக்கள் பரவி வருகின்றன.
அதனை பார்த்த ஏ ஆர் ரகுமான் மகள் மகள் கதிஜா மறுத்து இருக்கிறார். ‘ஏன் இப்படி தேவையில்லாமல் வதந்தி பரப்புகிறீர்கள்’ என அவர் கோபமாக கேட்டு சமூகவலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் .