அர்த்தமே புரியாமல் ஆதவ் பேசுகிறார்… 2026ல் மாற்றம் இருக்கும் : டிடிவி டுவிஸ்ட்!

Author: Udayachandran RadhaKrishnan
7 December 2024, 6:08 pm

அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, தேர்தல் அரசியலில் மக்கள் ஓட்டுப் போட்டு தேர்வு செய்து தான் ஒருவர் முதல்வராகிறார். இதில் பிறப்பால் ஒருவர் முதல்வராகிறார் என்று எந்த அர்த்தத்தில் ஆதவ் அர்ஜூன் கூறுகிறார் என்ற தெரியவில்லை.

உதயநிதி மக்களால் எம்.எல்.ஏ வாக தேர்வு பெற்று தான் துணை முதல்வராகி உள்ளார். அதனால் அதை எப்படி குறை கூற முடியும். ஒருவரின் தந்தையோ உறவினரோ அரசியலில் இருந்தால் மகன், மகள்கள் வருவது உலகம் முழுவதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

ஒருவரை திட்டமிட்டு புரமோட் செய்வதைத் தான் கூறுகிறார்கள். அப்படி செய்யக் கூடாது தான். அதையும் மீறி மக்களும் ஓட்டுப்போட்டு வருகிறார். அதை எப்படி தடுக்க முடியும் என்று தெரியவில்லை.

இதையும் படியுங்க: ‘திருமாவளவன் போல் விஜய் ஏமாறக்கூடாது’.. எச்சரிக்கும் தமிழக பாஜக!

அரசியலில் சீனியாரிட்டி முக்கியம் தான். ஆனால் சில கட்சி மற்றும் அரசு பதவிகளுக்கு சீனியாரிட்டி மட்டும் போதுமானது அல்ல. நான் தி.மு.க வையோ, வாரிசு அரசியலையோ ஆதரித்து பேசவில்லை. எதார்தத்தை கூறுகிறேன்.

பிறப்பால் ஒருவரை முன்னிருத்தக் கூடாது என்று ஆதவ் அர்ஜூன் கூறியிருந்தால், ஒருவர் தேர்தலில் நின்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வரும் போது எப்படி அதை தடுக்க முடியும், எப்படி தவறாகும் என்று கேட்கிறேன்.

எந்த கட்சியும் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று கூறுவது இயல்பானது. அதேபோல தி.மு.க கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றிபெறும் என்று கூறியுள்ளனர். அதில் அகம்பாவம், ஆணவம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஆண்ட கட்சிகள், ஆளப்போகும் கட்சிகள் எல்லா தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று கூறுவதும், அதற்கு எதிர்கட்சிகள், அதை முறியடிப்போம் என்று கூறுவதும் இயல்பு தான்.

TTV Dinakaran About Vijay

விஜய்கட்சியுடன் கூட்டணியா என்ற யூகங்களுக்கு நான் பதில் கூற விரும்பவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் இருக்கிறோம். எங்கள் கூட்டணியை பலப்படுத்துவதற்கு எங்களோடு வரும் கட்சிகளை நாங்கள் ஏற்றுக் கொள்வோம்.

அ.தி.மு.க என்ன நிலைமையில் உள்ள இருக்கிறது என்பதை அவர்களிடம் தான் கேட்கவேண்டும். தி.மு.க வின் மீது மக்களுக்கு ஏற்பட்டு உள்ள அதிருப்தி ஓட்டுக்கள், 2026 தேர்தலில் எங்கள் கூட்டணிக்கு வரும். எங்கள் கூட்டணி ஆட்சி அமையும்.

வெள்ள நிவாரண நிதியாக 2 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டார்கள். மத்திய அரசு மத்திய குழு ஆய்வுக்கு வரும் முன்பே 950 கோடி ரூபாய் அளித்து உள்ளது. ஆய்வுக்கு பிறகு மேலும் அதிகமாக அளிக்கும். கொடுக்கக் கூடிய இடத்தில் எங்கள் கூட்டணி அரசு உள்ளது. பல திட்டங்களைத் தரக் கூடிய அரசாக மத்திய அரசு இருக்கிறது. தி.மு.க கடந்த தேர்தலில பா.ஜ.க வை காட்டி பயமுறுத்தி ஆட்சிக்கு வந்தனர். இந்த முறை அது நடக்காது.

விழுப்புரம் உள்ளிட்ட மாவட்ட ங்களில் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டற்கு மழை மட்டுமே காரணமில்லை. சாத்தனூர் அணையை அவர்கள் திட்டமிடாமல் திறந்தது தான் காரணம்.

பல முறை தி.மு.க ஆட்சியில் இருந்து உள்ளது. பல மூத்த அமைச்சர்கள் உள்ளனர். ஆனாலும் அவர்கள் தேர்தல் வாக்குறுதிகளில் 90 சதவீதம் நிறைவேற்ற முடியாத ஆட்சியை நடத்துகின்றனர். 2024 ல் ஏழை – எளிய மக்களை ஏமாற்றி பண நாயகத்தால் வெற்றி பெற்றார்கள்.

2026 ல் பணநாயகத்தால் அவர்களால் வெற்றி பெற முடியாது. தமிழகம் முழுவதும் தி.மு.க மீது கடும் அதிருப்தி உள்ளது. கூட்டணி பலம் இருந்தாலும் அதை முறியடித்து எங்கள் கூட்டணி வெற்றி பெறும்.

ஜெ தொண்டர்கள் எங்கு இந்தாலும் அவர்கள் ஒன்றிணைந்து தன்னலமில்லாத தலைவரின் கீழ் கட்சியை கொண்டு வரும் போது ஜெ. ஆட்சி தமிழகத்தில் வரும்.

2021 தேர்தலில் பழனிசாமி தோற்றது போல 2026 தேர்தலில் ஸ்டாலின் தோற்பார். கூட்டணியை தக்க வைத்துக் கொண்டாலும் 2026 தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற விரக்தியில் முதல்வர் பேசி வருகிறார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் மக்களால் ஏற்றுக் கொள்ளக் கூடிய, தகுதியான நல்ல முதல்வர் வேட்பாளரை அறிவித்தே தேர்தலை சந்திப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.

  • Varun Dhawan Keerthy Suresh viral video அட்லீ போனை பார்த்து கீர்த்தி சுரேஷ் அதிர்ச்சி…ஒரு டைரக்டர்-க்கு உண்டான மரியாதையே போச்சு…!
  • Views: - 160

    0

    0