எப்போ.. Oh my God.. ஷாக்கான ரஜினிகாந்த்.. எதற்காக தெரியுமா?

Author: Hariharasudhan
9 December 2024, 9:57 am

திருவண்ணாமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தது தொடர்பாக ரஜினிகாந்த் வருத்தம் தெரிவித்துள்ளார்.

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் கூலி. இப்படத்தின் படப்பிடிப்பிற்காக ரஜினிகாந்த், சென்னையில் இருந்து ஜெய்ப்பூருக்கு விமானம் மூலம் செல்கிறார். இதற்காக இன்று (டிச.09) காலை அவர் சென்னை விமான நிலையம் வந்தார்.

அப்போது, திருவண்ணாமலை நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ஷாக்கான ரஜினிகாந்த், “எப்போ?’ எனக் கேட்டார். அதற்கு, சமீபத்தில் பெய்த பயங்கர மழையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர் என செய்தியாளர்கள் கூறினர்.

Rajinikanth about Tiruvannamalai landslide incident

இதனையடுத்து, “ஓ மை காட்..’ என வருத்தம் தெரிவித்தார். தொடர்ந்து கூலி படத்தின் படப்பிடிப்பிற்காகச் சென்று கொண்டிருப்பதாகவும், கூலி படத்திற்குப் பிறகு தான் அடுத்த படம் பற்றி யோசிக்க வேண்டும் எனவும் ரஜினிகாந்த் கூறினார். தற்போது, இது தொடர்பான கானொலி வைரலாகி வருகிறது.

Rajinikanth on Tiruvannamalai landslide

முன்னதாக, வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் பெரும் மழையால், திருவண்ணாமலை தீப மலையின் அடிவாரப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 5 குழந்தைகள் மற்றும் ஒரு தம்பதி என 7 பேர் உயிரிழந்து, 2 நாட்கள் போராட்டத்திற்குப் பிறகு அவர்களது உடல்கள் மீட்கப்பட்டது சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.

இதையும் படிங்க: பிக் பாஸ் பிரபலத்திற்கு புற்றுநோய்…37 வயதில் போராட்ட வாழ்க்கை..!

அதேநேரம், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் ‘கூலி’ என்ற படத்தில் தற்போது ரஜினிகாந்த் நடித்து வருகிறார். சமீபத்தில், த.செ.ஞானவேல் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் படம் வெளியானது. அமிதாப் பச்சன், பகத் பாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!