ஏ.ஆர்.ரகுமான் பாட்டுக்கு நடனம் ஆடிய யோகி பாபு…10M VIEWS கடந்த காதலிக்க நேரமில்லை படப் பாடல்..!
Author: Selvan9 December 2024, 1:51 pm
ஜெயம் ரவி யோகி பாபு கூட்டணி
ஜெயம் ரவி, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக தனது சிறந்த படைப்புகளால் தனக்கென ஒரு முத்திரையை பதித்துள்ளார்.
தனி ஒருவன், சந்தோஷ் சுப்ரமணியம்,ஜெயம்,வனமகன் போன்ற வெற்றி படங்களால் ரசிகர்களை கவர்ந்த இவர்,சமீபகாலமாக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறார். சமீபத்தில் வெளியான பிரதர் படமும் எதிர்பார்ப்பை விட தோல்வியை தழுவியது.
இதையும் படியுங்க: ”நாய் காதல்”… நாக சைதன்யாவின் மறுமணம் குறித்து தாக்கி பேசிய சமந்தா!
இந்நிலையில்,உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா இயக்கியுள்ள காதலிக்க நேரமில்லை திரைப்படம்,ஜெயம் ரவியின் திரைவாழ்க்கையில் முக்கிய திருப்பமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தில் நித்யா மேனன் ஹீரோயினாக நடித்துள்ளார்.
இந்த படத்தில் கவிஞர் விவேக் எழுதிய என்னை இழுக்குதடி பாடலை,ஏ.ஆர். ரகுமான் மற்றும் தீ இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று, ஒரே மாதத்தில் ஒரு கோடிக்கு அதிகமான பார்வையாளர்களை கடந்துள்ளது.
“காதலிக்க நேரமில்லை”
— Yogi Babu (@iYogiBabu) December 9, 2024
#KadhalikkaNeramillai @actor_jayamravi @MenenNithya @astrokiru @RedGiantMovies_ @arrahman @tseriessouth @talktodhee @Lyricist_Vivek @shobimaster @VinayRai1809 @LalDirector @highonkokken @TJBhanuOfficial @LakshmyRamki @VinodhiniUnoffl @ManoSinger_Offl pic.twitter.com/xmhswfpiit
தற்போது இந்த பாடலுக்கு யோகி பாபு அவரது ஸ்டைலில் நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி ரசிகர்களின் பாராட்டை பெற்றுவருகிறது.