சரியான அப்பா – அம்மாவுக்கு பிறந்திருந்தால் வழக்கு போடுயா…அண்ணாமலை சவால்!

Author: Udayachandran RadhaKrishnan
9 December 2024, 2:52 pm

கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசியவர், விசிக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தலைமையில் நடைபெற்ற அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் அர்பன் நக்சலான ஆனந்த் டெல்டும்டே ஏன் கலந்து கொள்ள வேண்டும் எனவும், தமிழகத்தில் நக்சல் அரசியல் ஊடுருவலை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார்.

மேலும், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மணிப்பூர் கலவரம் குறித்து பேசும்போது அதற்கு காரணமான அடிப்படை தகவல்களை தெரிந்து கொண்டு பேச வேண்டும் எனவும், பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தான் வடகிழக்கு மாநிலங்களில் மக்களுக்கு எதிரான சிறப்பு ஆயுத சட்டங்கள் பெருமளவு நீக்கப்பட்டுள்ளதாகவும் அண்ணாமலை குறிப்பிட்டார்.

செய்தியாளர் சந்திப்பில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது, தமிழகத்தின் பாரம்பரிய ஊடக நிறுவனமான விகடன் சார்பில் நடைபெற்ற அம்பேத்கர் புத்தக வெளியீட்டு நிகழ்வில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசினார். அவர் ஒரு புதிய கட்சியை துவங்கியுள்ளார் எனவே அவர் கலந்து கொள்வதில் எந்த பிரச்சனையும் இல்லை.

ஆனால் அர்பன் நக்சலான அம்பேத்கரின் பேத்தியை மணந்த ஆனந்த் டெல்டும்டே இந்நிகழ்வில் கலந்து கொண்டது தமிழகத்தில் நக்சல் அரசியலை கொண்டு வருவதற்கான செயல் எனவும், இதனை விகடன் நிறுவனம் செய்திருக்கக் கூடாது எனவும் கூறினார்.

ஆனந்த் டெல்டும்டேவின் சகோதரர் 2021 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் நடைபெற்ற நக்சல்களுக்கு எதிரான என்கவுண்டரில் கொல்லப்பட்ட 22 நக்சல்களில் ஒருவர் எனவும், பீமா கொராகன் கலவரம் குறித்து ஆனந்த் டெல்டும்டே வன்முறையை தூண்டும் விதத்தில் பேசி தற்போது உச்ச நீதிமன்ற ஜாமினில் வெளியில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், லாட்டரி அதிபரின் மகனான விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா திமுகவை மன்னர் ஆட்சி என விமர்சிக்கிறார், ஆனால் அவரது மாமனார் தான் தேர்தல் பத்திரங்களின் மூலம் திமுகவிற்கு 581 கோடியை வழங்கி உள்ளார் எனவும், ஆதவ் அர்ஜுனா சபரீசனுக்கும் மிக நெருக்கமாக இருந்து கடந்த தேர்தலில் பணியாற்றியவர் எனவும் தெரிவித்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தொல் திருமாவளவன் கட்டுப்பாட்டில் இல்லை எனவும், லாட்டரி அதிபரின் மருமகன் கையில் தான் உள்ளது என்பதை இந்த நிகழ்வு எடுத்துக்காட்டுவதாகவும், ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்க திருமா தயாராக இல்லை எனவும் அண்ணாமலை விமர்சித்தார்.

இதையும் படியுங்க: ‘கட்சிக்குள்ளேயே எதிர்மறை தாக்கம்’.. ஆதவ் அர்ஜுனா சஸ்பெண்ட்.. திருமாவின் காரணம்!

மேலும், திமுகவுக்கு எதிரான வாக்குகளை பிரிக்கும் யுத்தியாக திமுகவே இதை செய்வதாக கருதுவதாகவும், அம்பேத்கரை வைத்து அரசியல் வியாபாரம் செய்வதை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

மணிப்பூர் விவகாரம் குறித்து தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார், அவர் உட்பட எந்த அரசியல்வாதிகள் மணிப்பூர் செல்ல நினைத்தாலும் அவர்களோடு சென்று அங்குள்ள நிலையை விளக்க நான் தயாராக உள்ளேன் என கூறிய அண்ணாமலை, விஜய் மணிப்பூர் விவகாரம் குறித்த அடிப்படை தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் எனவும், அங்குள்ள பழங்குடியினர் பிரச்சனைகள், மியான்மர் நாட்டிலிருந்து ஊடுருவல், போதை கலாச்சாரம் ஆகியவை குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் எனவும், காங்கிரஸ் ஆட்சியின் போது சிறப்பு ஆயுதச் சட்டத்தை ரத்து செய்யக் கூறி பெண்கள் நிர்வாணமாக போராட்டம் நடத்திய மோசமான சூழல் இருந்த நிலையில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தற்போது வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, அசாம், மணிப்பூர், அருணாச்சல் பிரதேஷ், நாகாலாந்து ஆகிய பகுதிகளில் பெருமளவு சிறப்பு ஆயுத சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள வடகிழக்கு மாநிலங்களிலும் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்று ஆட்சி செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

அதேபோல், மணிப்பூரில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் போதைப் பொருட்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையை விட பாஜக ஆட்சியில் தான் அதிக அளவு நடவடிக்கை எடுக்கப்பட்டு போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டு வருவதாகவும், எந்த விதத்திலும் துப்பாக்கிச் சூடு இதற்கு தீர்வு இல்லை என பாஜக நினைப்பதாகவும், ஆக்கபூர்வமான ஜனநாயக முறையில் மணிப்பூர் விவகாரத்தில் பேசி தீர்வு காணப்படும் எனவும் அண்ணாமலை தெரிவித்தார்.

தமிழகத்தில் மன்னராட்சி நடைபெறுகிறது என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார், அவர் விசிகவில் பொறுப்புக்கு வந்த போது முதல்வர் ஸ்டாலினை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டவர் எனவும், அப்போது திமுக மன்னர் ஆட்சிக்கு உறுதுணையாக இருந்தது யார் எனவும், திமுக குடும்ப ஆட்சி செய்து வருவதாகவும், விசிக இருக்கும் கூட்டணி குறித்து அக்கட்சி நிர்வாகி விமர்சித்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் எனவும் அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.

அதானி விவகாரத்தைப் பொறுத்தவரை அதற்கான அறிக்கையை பாஜக வெளியீட்டும் அதற்குரிய பதிலளிக்காமல், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் நான் படித்தது பற்றி அமைச்சர் பேசியுள்ளார்.

இதையும் படியுங்க: சசிகலா உறவினரின் தனியார் கிளப்பை திறந்து வைத்த திருமாவளவன்.. எழுந்த சர்ச்சை.. விசிக விளக்கம்?!

லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் நான் படித்த போது அவர் புழல் சிறையில் படித்துக் கொண்டிருந்தார். அதானி விவகாரத்தில் தைரியம் இருந்தால் என் மீது வழக்கு தொடுக்கட்டும். அதை எதிர்கொள்ள தயாராக உள்ளேன் எனவும் அண்ணாமலை கூறினார்.

சிந்தாதிரிப்பேட்டையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரத்தில், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் சமாதானம் பேசி வைத்த காவல் துறையினர் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாளை தமிழக டிஜிபியை சந்தித்து பாஜக சார்பில் மனு அளிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதானி விவகாரத்தைப் பொறுத்தவரை அதற்கான அறிக்கையை பாஜக வெளியீட்டும் அதற்குரிய பதிலளிக்காமல், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் நான் படித்தது பற்றி அமைச்சர் பேசியுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜியை பெயர் குறிப்பிடாமல் குறிப்பிட்ட அண்ணாமலை, ஓராண்டிற்கு மேல் சிறையில் இருந்து பெயில் ரத்தாகி, அவர் ஆளுகின்ற மாநிலத்திலேயே அவரது தம்பி தலைமறைவாக இருக்கிறார் என்றார்.

அந்த அமைச்சரின் சகோதரர் அமலாக்கத்துறை விசாரணையில் கைதி என தெரிவித்த அவர் கரூர் சென்றால் அவரை தூக்கி வந்துவிடலாம் ஆனால் தமிழக காவல்துறை அதனை செய்யாது என தெரிவித்தார். இவ்வாறு செய்யும் பொழுது அவரை ஜாமீன் அமைச்சர் என்று சொல்லாமல் எப்படி சொல்வது எனவும் கேள்வி எழுப்பினார். 13ம் தேதி வரை பொறுத்து இருந்து உச்ச நீதிமன்றத்தில் என்ன கூறுகிறார்கள் என்று பார்ப்போம் எனவும் தெரிவித்தார்.

அதானி அம்பானிக்கு அதிமுக ஆட்சிக்காலத்தில் பணம் கொடுத்ததாக செந்தில் பாலாஜி கூறினாலும் அதன் பிறகு 77 கோடியை கொடுத்தீர்கள் எனவும், அதன் முதலில் பெனால்டி சார்ஜ் ஆக கொடுத்ததை ஏன் மறைத்தீர்கள் எனவும் தற்போது ஆட்சிக்கு வந்த பிறகு இரண்டாவது முறையாக கொடுத்தது ஏன் மறைத்தீர்கள் என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து “யோவ் ED கேசில் உள்ள போன நீ எல்லாம் என் மேலே கேஸ் போட்டு, FIR வாங்கணும்னு என்னுடைய தலைவிதி” “ஒரு வருஷம் ஜெயிலில் கம்பி எண்ணுனவன் நீ”. “நான் ஆக்ஸ்போர்ட்டில் படித்த அதே நேரத்தில் இந்த அமைச்சர் புழல் சிறையில் கம்பிய எண்ணியதை படித்தார்” என விமர்சித்தார்.

என்னை பொருத்தவரை கேட்ட கேள்விக்கு பதில் வரவேண்டும் அதானிக்கு கொடுத்தியா? இல்லையா?, ஆட்சிக்கு வந்த பிறகு 77 கோடி ரூபாய் கொடுத்தாயா இல்லையா கொடுத்தேன் என்று ஒத்துக்கோ… அதை விட்டுவிட்டு சுத்தி சுத்தி வளைக்கின்ற வேலையெல்லாம் என்னிடம் விட்டு விட வேண்டும். “தைரியம் இருந்தா என் மேலே கேஸ் போடுயா பார்த்துக்கலாம். சரியான அப்பா அம்மாக்கு பொறந்திருந்தா கேஸ் போடு பார்க்கலாம்…” .

தமிழ்நாடு அரசியலில் ஒரு மாற்றத்தை பார்த்தே ஆக வேண்டும். ஜெயிலில் இருக்கக்கூடிய அமைச்சர் கூறுகின்ற அளவிற்கு என்னுடைய அரசியல் மோசமாகிவிட்டதா?, முதலமைச்சரு உனக்கு நெருங்கிய நண்பர் அவருக்கு பையன் மாதிரி என்றெல்லாம் கூறுகிறீர்களே கேஸ் போடுங்கள் பார்க்கலாம்.

மகனை விட முக்கியமான அமைச்சர் என்று முதல்வரே கூறுகிறாரே, நீ போய் அவர் காலில் விழு டிஜிபியிடம் போய் கூறி என் மீது கேஸ் போடு பாத்துக்கலாம்…

நியாயத்தை பற்றி கேட்டால் அமைச்சர் பதவி என்று கூறுகிறார்கள், நியாயத்தை பேசினால் மிரட்டல் விடுகிறார்கள் அதனால் தான் அறிக்கையை தைரியமாக அளித்தேன். ஊரிலிருந்து இருந்தால் ஆடு மாடு மேய்த்துக் கொண்டிருந்திருப்பேன் இங்கு வந்து உங்களை எல்லாம் எதிர்த்து அரசியல் செய்து கொண்டிருக்கிறேன் உங்களை மாதிரியான ஆட்களை எல்லாம் ஓட விட வேண்டும் என்பதற்காகத்தான் தவமாக எடுத்து அரசியலுக்கு வந்துள்ளேன்.

ஐஏஎஸ் ஆபீஸர் எழுதி தருவதை தான் இவர் படிக்கிறார். நான் இங்கு சிங்கிள்மேன் ஆர்மியாக அமர்ந்து அறிக்கை தயார் செய்து google செய்ய வேண்டும் அதானியின் அறிக்கையை படிக்க வேண்டும் என்னிடம் ஐஏஎஸ் அதிகாரிகளா உள்ளார்கள் என்னிடம் அரசியல் நண்பர்கள் தான் உள்ளார்கள். கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் ஆக்ஸ்போர்ட் போனதை பற்றி பேசுகிறார். “நீ எல்லாம் உள்ளூர் பள்ளிக்கூடத்தில் ஆவது படித்தாயா என்று தெரியவில்லை கம்முனு இருக்க வேண்டியதுதானே. நான் ஆக்ஸ் வேர்ட் சென்றது எல்லாம் பெருமையாக கூறவில்லை எனவும் காமராஜர் ஐயா படிக்காததை நான் தற்பொழுதும் பெருமையாக கூறுகிறேன் என தெரிவித்தார்.

திமுக அமைச்சர்களுக்கு ஒன்றே ஒன்றை கூறிக் கொள்ள விரும்புகிறேன் மறுபடியும் நான் ஒரு ஆண்டு காலம் பின் செல்ல விரும்பவில்லை. ஆரோக்கியமான அரசியலை செய்யுங்கள் நானும் ஆரோக்கியமான அரசியலை செய்கிறேன்.

நான் ஆரோக்கியமான அரசியலை செய்ய வந்துள்ளேன் எனவும் நீங்கள் செய்வதை எல்லாம் மோப்பம் பிடித்து மோப்பம் பிடித்து பத்திரிக்கையாளர்களிடம் கூறுவது தான் என்னுடைய வேலை என்று நினைத்தால் அது என்னுடைய வேலை இல்லைஎன்னுடைய வேலை ஆரோக்கியமான அரசியல் செய்வதுதான் என தெரிவித்தார்.

Annamalai Criticized Tamilnadu Government

கேரளாவிற்கு வைக்கம் போராட்ட நினைவு நாள் நிகழ்ச்சிக்கு செல்லும் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் விவசாயிகளின் பிரதான பிரச்சனையாக உள்ள முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்தும், கேரளா அரசு தமிழகத்தின் உரிமையை மறுக்கும் நடவடிக்கைகள் குறித்தும் தெரிவிக்க வேண்டும் எனவும் அண்ணாமலை கேட்டுக்கொண்டார்.

  • உன்னை நீயே நம்பு போதும்.. தெறிக்கும் வரிகளில் வெளியான Vidaamuyarchi Second single!