நாள் முழுவதும் உட்கார்ந்து வேலை பார்க்கிறவங்களா நீங்க… அப்படின்னா இந்த எச்சரிக்கை உங்களுக்கு தான்!!!

Author: Hemalatha Ramkumar
9 December 2024, 4:26 pm

நீண்ட நேரத்திற்கு உட்கார்ந்திருப்பதால் நம்முடைய உடல் நலத்தில் பல்வேறு மோசமான விளைவுகள் ஏற்படலாம். அது வேலையாக இருந்தாலும், விளையாட்டாக இருந்தாலும் அல்லது டிவி பார்த்துக் கொண்டோ, எலக்ட்ரிக் சாதனங்களை பயன்படுத்திய படியோ எதுவாக இருந்தாலும் நீண்ட நேரத்திற்கு உட்கார்ந்திருக்கும் பொழுது உடலில் எந்த விதமான செயல்பாடும் நடைபெறாமல் இருப்பது நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பாதிக்கிறது. இது நம்முடைய உடலின் பல்வேறு செயல்பாடுகளை சீர்குலைக்கிறது. நீண்ட நேரத்திற்கு உட்கார்ந்து இருப்பதால் ஏற்படக்கூடிய உடல்நல பிரச்சனைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

மெதுவான வளர்சிதை மாற்றம் 

நீண்ட நேரத்திற்கு உட்கார்ந்திருப்பது மெட்டபாலிசத்தை மெதுவாக்கி, உடல் எடையை கட்டுப்படுத்துவதில் சிக்கலை ஏற்படுத்துகிறது. நீங்கள் எந்த ஒரு செயல்பாடும் இல்லாமல் இருக்கும் பொழுது தசைகள் குறைவான கலோரிகளை எரித்து, மெட்டபாலிசம் மெதுவாகும். இந்த சோம்பேறித்தனமான விகிதம் கொழுப்பு இழக்கப்படுவதை தாமதமாக்கி உடல் எடை அதிகரிக்க வழிவகுக்கும். தொடர்ச்சியாக உடல் செயலில்லாமல் இருப்பது இன்சுலின் உணர்திறனை குறைத்து, அதனால் ரத்த சர்க்கரை அளவுகள் அதிகரிக்கலாம்.

இதையும் படிச்சு பாருங்க: குளிர் காலத்தில் கை, கால்கள் சில்லுனு ஆகுதா… அதுக்கான சிம்பிள் டிப்ஸ்!!!

தோரணை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் 

நீண்ட நேரத்திற்கு உட்கார்ந்திருப்பதால் முதுகு மற்றும் கழுத்து வலி போன்ற தோரணை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படலாம். முதுகை வளைத்துக் கொண்டு உட்காருவது அல்லது முதுகுத்தண்டு தசைகளுக்கு அழுத்தம் இருக்கும் வகையில் அமர்ந்திருப்பது போன்றவை அசௌகரியத்தை ஏற்படுத்தும். இது டிஸ்க்குள் மற்றும் ஜாயிண்டுகளில் அழுத்தத்தை உண்டாக்கும். நீண்ட நேரத்திற்கு உட்கார்ந்திருப்பது கழுத்து மற்றும் தோள்பட்டை தசைகளை இறுக்கி அதனால் வலியை ஏற்படுத்தும்.

இதய நோய் 

நீண்ட நேரத்திற்கு உட்கார்ந்திருப்பது இதய நோய் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கலாம். உடல் செயல் இல்லாமல் இருக்கும் பொழுது கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரித்து, நல்ல கொலஸ்ட்ரால் குறைகிறது. அதுமட்டுமல்லாமல் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் டிரைகிளிசரைடு அளவுகளும் அதிகரிக்கிறது. உட்காந்த வாழ்க்கை முறையின் விளைவாக இன்சுலின் உணர்திறன் ஏற்பட்டு, வீக்கம் மற்றும் ரத்த உறைதல் உண்டாகிறது. நீண்ட நேரத்திற்கு உட்கார்ந்திருப்பதால் நம்முடைய இதய ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு பக்கவாதம் மற்றும் கார்டியாக் அரஸ்ட் போன்ற இதய நோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் இரண்டு மடங்காகிறது.

டயாபடீஸ் 

நீண்ட நேரத்திற்கு உட்கார்ந்திருப்பதால் டயாபடீஸ் ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது. ஏனெனில் செயல்பாடு இல்லாமல் இருப்பது இன்சுலின் உணர்திறனை குறைத்து, குளுக்கோஸ் சீரமைப்பை பாதிக்கிறது. இதனால் ரத்த சர்க்கரை அளவுகள் அதிகரிக்கலாம். வீக்கம் மற்றும் இன்சுலின் உணர்திறன் ஏற்படலாம். நீண்ட நேரத்திற்கு உட்கார்ந்திருப்பது கணைய செயல்பாட்டில் சேதத்தை ஏற்படுத்தி வகை 2 டயாபடீஸ் உருவாவதற்கான வாய்ப்பை அதிகமாக்கும்.

பதட்டம் 

நீண்ட நேரத்திற்கு நம்முடைய உடலில் எந்த ஒரு செயல்பாடும் இல்லாமல் இருந்தால் அது மன அழுத்த ஹார்மோன்களை அதிகரிக்கும். உட்காந்த வாழ்க்கை முறையானது தனிமையில் இருக்கும் உணர்வை அதிகரிக்கும். மேலும் உங்களுடைய யோசனைகள் வலுவிழந்து பதட்டம் சம்பந்தப்பட்ட அறிகுறிகள் அதிகமாகும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Nithya Menon Rejects Marriage Want to single திருமணத்தை வெறுத்து ஒதுக்கும் பிரபல நடிகை.. 36 வயதாகும் முரட்டு சிங்கிள்…!!