6 மாதம் நடந்த போராட்டம் அப்பா : மறைந்த சீரியல் நடிகர் நேத்ரன் மகள் உருக்கம்!
Author: Udayachandran RadhaKrishnan9 December 2024, 5:12 pm
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி, பொன்னி போன்ற சீரியல்களில் மற்றும் கலைஞர் தொலைக்காட்சியில் ரஞ்சிதமே சீரியலிலும் நடித்து வந்தார் நடிகர் நேத்ரன்.
ஆனால், திடீரென அவர் எல்லா தொடர்களிலும் இருந்து காணாமல் போயார். அதற்கான காரணம், கடந்த 6 மாதங்களாக அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலன் இல்லாமல், அவர் உயிரிழந்தார்.
இதையும் படியுங்க: அந்த ஏழு பேர்… ரஜினியின் கமெண்ட்ஸ்… கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்!
நேத்ரன் மறைவுக்குப் பிறகு, அவரது மகள் அபிநயா தனது சமூக ஊடக பக்கத்தில் ஒரு ஆழ்ந்த பதிவு போட்டார். அதில், “உங்களை ஒரு ஹீரோவாக பார்க்க உலகம் தவறிவிட்டது. ஆனால் நீங்கள் எப்போதும் எங்களுக்கு பிடித்த ஒரே ஹீரோவாக இருந்தீர்கள்” என்று கூறியுள்ளார்.
மேலும், “உங்கள் கனவுகளை நிறைவேற்ற முடியாமல் போனது உங்கள் தவறல்ல, நாங்கள் அதை செய்வோம்” என தன்னம்பிக்கையுடன் பதிவு செய்துள்ளார். இந்த பதிவு பார்த்து, பலர் அபிநயாவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்