ஓசி குழம்புக்காக DRAMA : உணவக உரிமையாளரை உணவு பாதுகாப்பு துறையில் சிக்க வைத்த நபர்..!!

Author: Udayachandran RadhaKrishnan
9 December 2024, 5:57 pm

தேனி அல்லிநகரத்தில் உள்ள உணவகத்தில் இரண்டு நபர்கள் கடந்த சனிக்கிழமை அன்று உணவு சாப்பிட சென்றுள்ளனர் அப்போது ஹோட்டலில் அமர்ந்து சாப்பிடும் போது உணவில் முடி இருப்பதாக உரிமையாளரிடம் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து வேறு புரோட்டா எடுத்து வருவதாக உரிமையாளர் கூறியுள்ளார். இதனை ஏற்றுக் கொள்ளாத அந்த நபர் உணவில் சுத்தமில்லாமல் முடி இருப்பதாகவும் இதனை வீடியோ எடுத்து உணவு பாதுகாப்பு துறைக்கு அனுப்புவேன் என மிரட்டி உள்ளார்.

பின்னர் சிசிடிவி காட்சியை பார்த்த போது உணவு சாப்பிட வந்த நபர் வேண்டுமென்றே தன் உடலில் உள்ள முடியை எடுத்து உணவில் போடுவது தெரிய வந்தது.

இதனை அடுத்து ஹோட்டல் உரிமையாளர், தேனி மாவட்ட ஹோட்டல் சங்க நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஹோட்டல் சங்கத்தினர் சிசிடிவி காட்சி ஆதாரத்துடன் புகார் தெரிவித்தனர்

Hotel

தேனி மாவட்டத்தில் உள்ள ஹோட்டல்களில் போலி நிருபர்கள், போலி வழக்கறிஞர்கள் என்ற பெயரில் வரும் நபர்கள் மற்றும் சில கட்சிகளை சேர்ந்த நபர்களும் பணம் கேட்டு இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் இதனால் தங்கள் தொழில் பாதிக்கப்படுவதாகவும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனுவை அளித்தனர்

இதுகுறித்து ஹோட்டல் உரிமையாளர் சரவணன் கூறுகையில் கடைக்கு வந்த இரு நபர்கள் புரோட்டா வேண்டும் என்று கேட்டதாகவும் பின் குழம்பு ஊற்றும் போது அதில் முடி இருப்பதாக கூறி என்னை அழைத்தார்கள்.

நான் வேறு பரோட்டா எடுத்து வருகிறேன் என கூறினேன். ஆனால் அதனை ஏற்க மறுத்து வீடியோ எடுத்து வைத்து உணவு பாதுகாப்பு துறையிடம் அனுப்புவேன் என கூறி மிரட்டியதாக தெரிவித்தார். சம்பவத்திற்கு முன்பு கடையில் வந்து தன்னிடம் குழம்பு கேட்டதாகவும் தான் கொடுக்க மறுத்ததன் காரணமாக இது போல் மிரட்டுவதாக தெரிவித்தார்.

  • Nayanthara Vignesh Shivan relationship விக்னேஷ் சிவனை திருமணம் பண்ணது தப்பு : மனம் திறந்து பேசிய நயன்தாரா…காரணம் இதுதான்..!
  • Views: - 119

    0

    0

    Leave a Reply