தனுஷ் படத்தால் நடந்த விபரீதம் : மொத்த சொத்தையும் பறிகொடுத்த இயக்குனர்…மீள முடியாமல் தவிப்பு..!
Author: Selvan9 December 2024, 9:10 pm
தொடரி திரைப்பட விவகாரம்
திரைப்படத்துறையில் தனக்கென ஒரு தனிச்சிறப்பை அமைத்தவர் இயக்குனர் பிரபு சாலமன்.இவர் தனது கிராமிய உணர்வுகள் மற்றும் இயற்கை சார்ந்த கதைகளால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.
இவர் தன்னுடைய இயக்குநர் பயணத்தை கண்ணோடு காண்பதெல்லாம் படத்தின் மூலம் தொடங்கினார்.அதன் பின்பு விக்ரம் நடிப்பில் கிங், மற்றும் கொக்கி,லியோ, லாடம் ஆகிய படங்களை இயக்கி தோல்வியை சந்தித்தார்.அதன் பிறகு மைனா,கும்கி போன்ற பல வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தார்.
தனுஷ் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான தொடரி படம் பிரபு சாலமனின் வாழ்க்கையில் பெரிய சோதனையாக அமைந்தது.
படப்பிடிப்பில் சில பிரச்சனைகள் ஏற்பட்டதாகவும்,தனுஷ் படப்பிடிப்பிற்கு சரியாக வராமல் படத்தின் செலவுகள் அதிகரித்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
இதையும் படியுங்க: அனிருத்தை பின்னுக்கு தள்ளிய 20 வயது இளைஞன் :இந்த வருடம் அதிகம் பேர் கேட்ட பாடல் எது தெரியுமா..!
இதனால் பிரபு சாலமனை அழைத்த தயாரிப்பாளர்,இன்னும் படத்திற்கு செலவு செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்,ஆனால் படம் தோல்வி அடைந்தால் நீங்கள் தான் பொறுப்பு என ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கினார்.
படமும் வெளியாகி தோல்வி அடைந்ததால் தயாரிப்பாளரின் கோரிக்கையின்படி பிரபு சாலமன் படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை தன்னுடைய சொந்த பணத்தால் ஈடு செய்துள்ளார் என்ற தகவல் பேசப்பட்டு வருகிறது.