ராஷ்மிகாவை மருமகளா ஏற்க முடியாது.. விஜய் தேவரகொண்டா வீட்டில் எழுந்த பிரச்சனை!
Author: Udayachandran RadhaKrishnan9 December 2024, 6:50 pm
ராஷ்மிகாவை திருமணம் செய்ய கூடாது என விஜய் தேவரகொண்டாவுக்கு அவரது பெற்றோர்கள் கடும் கண்டிஷன் போட்டுள்ளதாக பிரபல பத்திரிகையாளர் கூறியுள்ளார்.
யூடியூப் சேனலுக்கு சேனலுக்கு அளித்த பேட்டியில் சினிமா பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன், நடிகை ரஷ்மிகா மந்தனாவின் வாழ்க்கையைப் பற்றி சில முக்கிய தகவல்களை பகிர்ந்தார். அவர் கூறியதாவது, ரஷ்மிகா சினிமா துறையில் வருவதற்கு முன்பு, நிச்சயதார்த்தம் முடிந்து போனது. அதன் பிறகு, மாடலிங்கில் முன்னேறி சினிமாவுக்கு வந்த ரஷ்மிகா, தன்னுடைய முதல் படத்திலேயே பெரும் வெற்றி பெற்றார். தெலுங்கு சினிமாவில் விஜய் தேவரகொண்டா உடன் கீதா கோவிந்தம் படத்தில் நடித்தார், அது மாபெரும் வெற்றியாகும்.
அந்த வெற்றியுடன், தமிழில் கார்த்தி உடன் சுல்தான் மற்றும் விஜய் உடன் வாரிசு போன்ற படங்களில் நடித்தார், அவையும் வெற்றிபெற்றன. ஆனால் தமிழில் அவர் எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் அக்கடி வந்தது இல்லை. அதேவேளை, தெலுங்கில் புஷ்பா முதல் பாகம் பிரமாண்ட வெற்றி பெற்றது. அதன் பின், புஷ்பா 2 தற்போது உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்து வருகிறது. ஆனால், இந்த படமே ரஷ்மிகாவிற்காக ஒரு “மைனஸ்” என்று ரங்கநாதன் குறிப்பிட்டார்.
இதையும் படியுங்க: 6 மாதம் நடந்த போராட்டம் அப்பா : மறைந்த சீரியல் நடிகர் நேத்ரன் மகள் உருக்கம்!
காரணம், புஷ்பா 2 படத்தில் அவர், அல்லு அர்ஜூனுடன் கவர்ச்சியான காட்சிகளில் நடித்துள்ளார். இதில், அவர் மிகவும் செம்மையற்ற, அளவுக்கு மீறிய கவர்ச்சியைக் காட்டியதாக கூறப்படுகிறது. ரஷ்மிகா, விஜய் தேவரகொண்டாவுடன் காதலித்து வருவதையும், தீபாவளி பொங்கல் அன்றுடன் அவரின் குடும்பத்துடன் நேரம் கழித்ததையும் நினைவில் வைக்கும்போது, இது அவருடைய சமூகம் மற்றும் விருப்பத்திற்கு பின்பற்றாத நடிப்பு என பலரும் விமர்சிக்கின்றனர்.
பிரபல பத்திரிகையாளர், “புஷ்பா 2” படத்திற்குப் பிறகு, விஜய் தேவரகொண்டாவின் குடும்பத்தினர் ரஷ்மிகாவை மருமகளாக ஏற்றுக் கொள்வாரா என்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று கூறினார். அவர், “இந்த கவர்ச்சி விஷயம், திருமணத்திற்கு பின் ரஷ்மிகா நடிக்காமல் இருக்க வேண்டும் என அவசியமாக இருக்கலாம்” என்றும் தெரிவித்தார்