செந்தில் பாலாஜி வழக்கில் டுவிஸ்ட்.. அமலாக்கத்துறை மனு : தேதி குறித்த கோர்ட்!

Author: Udayachandran RadhaKrishnan
9 December 2024, 8:25 pm

செந்தில் பாலாஜிக்கு எதிரான முறைகேடு வழக்கை விரைவில் விசாரிக்கக் கோரி ஒய். பாலாஜி என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு, நீதிபதி அபய் ஓகா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரருக்கும், வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதிட்டார். அவர், “இந்த வழக்கில் மனுதாரருக்கு சாட்சி இல்லை” என்றும், “உயர்நீதிமன்றத்தின் மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லை” என்றும் கூறினார்.

இதையும் படியுங்க: பிளஸ் 1 மாணவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கொடூரம்.. இளைஞர் வெறிச்செயல்!!

செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மற்றொரு வழக்கறிஞர், “இந்த வழக்கின் அனைத்து அம்சங்களும் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன” என கூறினார். இது கேட்ட பிறகு, நீதிபதிகள், “உயர்நீதிமன்றத்தை நாடி இருக்கலாமே?” என்று கருத்து தெரிவித்தனர்.

இதற்கு பதில் வாதம் செய்த மனுதாரர் தரப்பு, “உச்சநீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்தால், பிற நீதிமன்றங்கள் தலையிட முடியாது” என்று விளக்கினார்.

இந்த வழக்குக்கும் செந்தில் பாலாஜிக்கும் தொடர்பு இல்லை என்பதால் தள்ளுபடி செய்ய அமைச்சர் தரப்பினர் கோரிக்கை வைத்த நிலையில், வழக்கு ஜனவரி 10-ஆம தேதி க்கு ஒத்திவைக்கப்பட்டது.

  • valaipechu bismi said the reason behind empuraan movie re censor on sudden விடுமுறை நாளில் சென்சார் பண்ண வேண்டிய அவசியம் என்ன? எம்புரான் விவகாரத்தின் உண்மை பின்னணி இதுதான்- ஓபனாக போட்டுடைத்த பிரபலம்