ஐட்டம் டான்ஸ்… அல்லு அர்ஜுன் Vs சித்தார்த் : கொந்தளித்த ரசிகர்கள்!

Author: Udayachandran RadhaKrishnan
10 December 2024, 9:31 am

நடிகர் சித்தார்த் எப்போதும் சர்ச்சைக்கு பெயர்போனவர். மீடியாவின் கவனம் அவர்மீது இருக்க வேண்டும் என்பதற்காகவே, அவர் வேண்டுமென்றே சர்ச்சையை உருவாக்கிவிடுவார் என அவர் மீது விமர்சனங்கள் குவிகிறது.

சமீபத்தில், அவரது புதிய திரைப்படமான “மிஸ் யூ” ப்ரோமோஷன் நிகழ்வில், “புஷ்பா 2” தனது படத்துடன் மோதுவது குறித்து பேசி, “புஷ்பா 2 தான் என் படத்துடன் மோதுவதற்கு பயப்பட வேண்டும், நான் அல்ல” என்று கூறினார்.

அல்லு அர்ஜூனை கேலி செய்த சித்தார்த்

இதை விட அதிர்ச்சியளிக்கின்ற அவர் சமீபத்திய கருத்து ஒன்று, இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சமீபத்திய பேட்டியில், புஷ்பா 2 படத்தின் டீசர் நிகழ்வுக்காக சுமார் 3-4 லட்சம் பேர் கூடுயிருந்தனர், இதை சாதாரண விளம்பரம்தான் என்று சித்தார்த் விளாசினார்.

இதையும் படியுங்க: தனுஷ் படத்தால் நடந்த விபரீதம் : மொத்த சொத்தையும் பறிகொடுத்த இயக்குனர்…மீள முடியாமல் தவிப்பு..!

மேலும் அவர் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. அதில், “நம் நாட்டில், ஒரு ஜேசிபி மண் தோண்டும் இடத்தில் கூட கூட்டம் கூடும். அதனால் பீகாரில் அல்லு அர்ஜுனை பார்க்க கூட்டம் கூடுவது வியப்புக்குரியதில்லை.

அவர்கள் ஏற்பாடு செய்தால் கூட்டம் வரும். இந்தியாவில் கூட்டம் என்பது தரத்தை குறிக்காது. உண்மையில் அது தரமானதானால், எல்லா அரசியல் கட்சிகளும் வெற்றி பெறவேண்டும். அந்த கூட்டம் பிரியாணி பாக்கெட், குவார்டர் பாட்டில் போன்ற காரணங்களுக்காக வருகிறது” என பேசியிருந்தார்.

இது இணையத்தில் கடும் எதிர்ப்புக்கு வழிவகுத்துள்ளது. நெட்டிசன் ஒருவர் அவரை கேலி செய்து, “சித்தார்த்த் தெருவில் ஐட்டம் டான்ஸ் செய்தால் கூட அவரை பார்க்க யாரும் வரமாட்டார்கள், தமிழ்நாட்டில் கூட என்று கூறினார். மற்றொருவர் தெலுங்கு நடிகர்கள் மற்றும் அவர்களின் அகில இந்திய வெற்றியை அவர் பொறாமைப்படுகிறார் என்று குற்றம்சாட்டினர்.

பலர், அவரது படம் ரிலீஸுக்கு முன்னதாகவே இது போன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை விளம்பரத்திற்காக திட்டமிட்டே கூறி வருவதாகவும் சொல்கின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 117

    0

    0

    Leave a Reply