மருதாணி டார்க்கா சிவக்க இந்த ஹேக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க!!!
Author: Hemalatha Ramkumar10 December 2024, 11:07 am
மருதாணி பிடிக்காத பெண்களே இருக்க முடியாது. அதிலும் திருமணம் என்றால் கட்டாயமாக பெண்கள் கைகளில் ஆசையோடு மருதாணி அணிந்து கொள்வது ஒரு வழக்கமாகவே இருக்கிறது. மருதாணி என்ற உடனேயே அது நன்றாக சிவக்க வேண்டும், நீண்ட நாள் இருக்க வேண்டும் என்று நினைப்போம். அதிலும் இன்னும் பல கலாச்சாரங்களில் மருதாணி நன்றாக சிவந்தால் வரக்கூடிய மணப்பெண் அதிர்ஷ்டமானவளாக இருப்பாள் என்று கூட கருதப்படுகிறது. மருதாணி நன்றாக சிவக்க கெமிக்கல் இல்லாத பல இயற்கையான வழிகள் உள்ளன அவ்வாறான சில இயற்கை தீர்வுகளை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.
எலுமிச்சை மற்றும் சர்க்கரை
எலுமிச்சை சாற்றுடன் ஒரு டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கவும். இப்பொழுது ஒரு காட்டன் பந்தை எடுத்து இந்த கலவையில் முக்கி கவனமாக காய்ந்த உங்களுடைய மருதாணியின் மீது ஒத்தி எடுக்கவும். இதனை 15 முதல் 20 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு பிறகு கைகளை கழுவவும். சிறந்த முடிவுகளுக்கு இந்த செயல்முறையை உங்களுடைய மருதாணி காய்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு 1/2 மணி நேரத்திற்கு ஒருமுறை செய்யவும்.
கிராம்பு நீராவி
ஒரு சில கிராம்பு துண்டுகளை எடுத்து அதனை தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைக்கவும். 15 முதல் 20 நிமிடங்களுக்கு உங்களுடைய கைகளை அந்த நீராவியின் மீது காட்டவும். அதிலிருந்து வரும் நீராவி உங்களுடைய கைகளில் உள்ள மருதாணியை தொடுவதை உறுதிப்படுத்துங்கள். கைகள் சுட்டு விடாமல் இருப்பதை தவிர்க்க நீராவிக்கு மிக அருகில் கைகளை காட்ட வேண்டாம்.
அத்தியாவசிய எண்ணெய்கள்
மருதாணியை சிவக்க வைக்க லாவெண்டர் அல்லது யூகலிப்டஸ் போன்ற அத்தியாவசிய எண்ணெய்களை நீங்கள் பயன்படுத்தலாம். இதற்கு உங்களுடைய மருதாணியின் மீது அத்தியாவசிய எண்ணெயை தடவுங்கள். இது உங்களுடைய சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை வழங்கி மென்மையாக மாற்றும். மேலும் அதற்கு தேவையான போஷாக்கை அளித்து, மருதாணியை சிவக்க செய்யும்.
இதையும் படிச்சு பாருங்க: எண்ணெய் இல்லாமல்… பொரிக்காமல்… வாயில் போட்ட உடனே கரைந்து போகும் பாசிப்பருப்பு லட்டு!!!
கைகளை மூடிக்கொள்ளவும்
கதகதப்பான, ஈரப்பதமான சூழலில் மருதாணி ஆழமாக சிவக்கும். இதற்கு உங்களுடைய மருதாணி காய்ந்தவுடன் அதில் ஆக்சிடேஷன் செயல்முறையை விரைவுப்படுத்துவதற்கு உங்களுடைய கைகளை காட்டன் துணியை கொண்டு சுற்றிக் கொள்வது வெப்பம் மற்றும் ஈரப்பதத்தை லாக் செய்து வைக்க உதவும்.
டீ பேக் பயன்படுத்தவும்
மருதாணியை ஆழமாக சிவக்க வைப்பதற்கு பயன்படுத்தப்படும் ஒரு பழமையான தீர்வு தேநீர். பிளாக் டீயில் காணப்படும் டானின்கள் மருதாணியின் ஆழமான நிறத்தை மேம்படுத்தி கொடுக்கும். எனவே அடுத்த முறை மருதாணி போடும்பொழுது நிச்சயமாக இந்த குறிப்புகளை முயற்சி செய்து பார்க்க மறக்காதீர்கள்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.