சீரியல் நடிகை TO சொகுசு கப்பல் உரிமையாளர்…கோடிகளில் மிதக்கும் ஆல்யா மானசா..!

Author: Selvan
10 December 2024, 3:01 pm

சஞ்சீவ்-ஆல்யா ஜோடியின் புதிய முதலீடு

சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா, தனது தனிப்பட்ட மற்றும் தொழில்வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேற்றங்களை பெற்று வருகிறார்.

அண்மையில் சென்னையில் கோடிக்கணக்கான செலவில் வீடு கட்டிய இவர், தற்போது புதியதாக சொகுசு போட் ஹவுஸ் ஒன்றை வாங்கியுள்ளார்.

Alya Manasa new business

ஆல்யா மானசா, விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.அதன் மூலம் சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு குழந்தைகளுக்காக சில ஆண்டுகள் சீரியல்களில் இருந்து ஒதுங்கியிருந்தாலும், பின்னர் சன் டிவியின் இனியா சீரியல் மூலம் மீண்டும் ரசிகர்களை கவர்ந்தார்.

இதையும் படியுங்க: “மிஸ் யூ அப்பா”….கொடுமையான நேரம் அது…மனம் உடைந்து பேசிய அதர்வா..!

பிரம்மாண்ட வசதிகள் கொண்ட போட் ஹவுஸ்!

கேரளாவின் ஆலப்புழா பகுதியில், உலகப்புகழ்பெற்ற போட் ஹவுஸ் பிசினஸில் புது சொகுசு கப்பலை வாங்கி தன்னுடைய புது தொழிலை ஆரம்பித்துள்ளார்.

Alya Manasa Kerala boat house

2 கோடிகள் மதிப்புடைய இந்த சொகுசு போட் ஹவுசில்,ஒரு பிரம்மாண்டமான டைனிங் ஹால், சொகுசான படுக்கையறைகள் மற்றும் தனிப்பட்ட டிஜே வசதிகள் உள்ளது.

இதனால் ஆல்யா மானசாவுக்கு, ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?