உங்களுடைய இசை வேற மாதிரி…பிரபல கர்நாடக இசை பாடகரை புகழ்ந்த இளையராஜா..!
Author: Selvan10 December 2024, 3:44 pm
இளையராஜாவின் பாராட்டு:சஞ்சய் சுப்ரமண்யனின் புஷ்பலதிகா
தமிழ் சினிமாவில் இசை ஜாம்பவானாக திகழ்பவர் இசையானி இளையராஜா.தற்போது இருக்கும் ட்ரெண்டுக்கு ஏற்ப தன்னுடைய இசையில் புது புது நுட்பங்களை கொண்டு வந்து ரசிகர்களை தன்னுடைய இசையால் மயக்கி வருகிறார்.
தமிழ் சினிமாவில் மற்ற கலைஞர்கள் இளையராஜாவிடம் இருந்து பாராட்டை பெற தவமாய் தவமிருக்கும் காலகட்டத்தில்,தற்போது அவரே ஒரு பிரபல பாடகரை புகழ்ந்து தன்னுடைய டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதையும் படியுங்க: சீரியல் நடிகை TO சொகுசு கப்பல் உரிமையாளர்…கோடிகளில் மிதக்கும் ஆல்யா மானசா..!
சஞ்சய் சுப்ரமண்யனின் இசை நிகழ்ச்சி
பிரபல கர்நாடக இசை பாடகரான சஞ்சய் சுப்ரமண்யன் நேற்று சென்னையில் “தமிழும் நானும்” என்ற இசை நிகழ்ச்சியில் பல பாடல்களை பாடி அங்கே இருக்கக்கூடிய ரசிகர்களை பரவசப்படுத்தினார்.அதிலும் குறிப்பாக அவர் பாடிய புஷ்பலதிகா ராகத்தை தன்னுடைய ட்விட்டர் தளத்தில் பதிவு செய்து புஷ்பலதிகா “நெனப்பு..ஒரு தனி ரகம்”என போட்டு இருந்தார்.பல ரசிகர்கள் இவருடைய புஷ்பலதிகா பதிவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.
இந்த பதிவை பார்த்த இளையராஜா அவருடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.அதிலும் குறிப்பாக “உங்க புஷ்பலதிகா நெனப்பு..வேற ரகம்!” என மனமார பாராட்டியுள்ளார்.
உங்க புஷ்பலதிகா – நெனப்பு, வேற மாதிரி !! வாழ்த்துக்கள் https://t.co/PfL0x77r4e
— Ilaiyaraaja (@ilaiyaraaja) December 10, 2024
சஞ்சய் சுப்ரமண்யன் சென்னை, மும்பாய், டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு உள்ளிட்ட பல இந்திய நகரங்களிலும் அமெரிக்கா, ஆத்திரேலியா, இந்தோனேசியா, மலேசியா உள்ளிட்ட பல வெளிநாடுகளிலும் இசைக் கச்சேரிகள் செய்து வருகிறார்.
இவர் அரிய தமிழ் பாடல்களைத் தேர்ந்தெடுத்து அவற்றிற்கு இசை வடிவம் தந்து பாடுவதில் வல்லவர்.எந்தப் பாடலாக இருந்தாலும் அதை மனனம் செய்து அதனுடைய பொருள் உணர்ந்து மனம் ஒன்றிப் பாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.