பிரபல நடிகர் சிவராஜ்குமார் நிலைமையை பாருங்க:கேன்சருக்கு பின் வைரலாகும் புகைப்படம்..ரசிகர்கள் ஷாக்..!
Author: Selvan10 December 2024, 4:44 pm
சிவராஜ்குமார்:சமீபத்திய நிலை
கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் சமீபத்தில் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால்,அதற்கு சிகிச்சை மேற்கொள்ள அமெரிக்கா சென்றுள்ளார் என்று தகவல் பரவி வந்தது.
அவர் அங்கு சிகிச்சையை மேற்கொள்ள ஆறு மாதங்களுக்கும் மேலாக தங்கப்போகிறார் என்று கூறப்பட்டது. இந்த தகவலுக்கு பிறகு, அவரது ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
இதையும் படியுங்க: உங்களுடைய இசை வேற மாதிரி…பிரபல கர்நாடக இசை பாடகரை புகழ்ந்த இளையராஜா..!
சிவராஜ்குமார்,தமிழ் சினிமா ரசிகர்களிடமும் ஏராளமான ரசிகர்கள் கொண்டவர்.அவர் தமிழிலும் சில படங்களில் சிறப்பாக நடித்துள்ளார்,அதிலும் குறிப்பாக ஜெயிலர் படத்தில் மாஸ்ஸாக நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்றார்.
சாமி தரிசனம்
இந்த நிலையில் அவர் குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில், சிவராஜ்குமார் மற்றும் அவரது மனைவி இருவரும் மொட்டை அடித்து திருப்பதியில் சாமி தரிசனம் செய்யும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.