விஜய் படத்தில் கமிட் ஆனதால் அடித்தது லக்… பிரபல நடிகருக்கு ஜோடியாகும் மமிதா பைஜூ!
Author: Udayachandran RadhaKrishnan11 December 2024, 10:33 am
சினிமாவை பொறுத்தவரை கடின உழைப்பை தாண்டி, அதிர்ஷ்டம் என்பது இருந்தால் குறுகிய காலத்திலேயே வெற்றியை தொட்டு விடலாம்.
பிரதீப் ரங்கநாதனுடன் இணையும் மமிதா பைஜூ
அப்படித்தான் நடிகை மமிதா பைஜூவுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. மலையாள சினிமாவில் அறிமுகமாகி, சூப்பர் சரண்யா, பிரேமலு படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்திருந்தார்.
இதையும் படியுங்க: அஜித் வெளியிட்ட திடீர் பதிவு : “க….. அஜித்தே”…ரசிகர்களுக்கு அறிவுரை..!
தமிழில், விஜய்யுடன் தளபதி 69 படத்தில் இணைந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுது. குறுகிய காலத்திலேயே விஜய்யுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது குறித்து சினிமா உலகில் பேசப்பட்டது.
தற்போது பிரதீப் ரங்கநாதனுடன் இணையாக நடிக்க உள்ளார். லவ் டுடே படம் மூலம் நடிகராக அந்தஸ்து பெற்ற இயக்குநர் பிரதீப்புடன் அவர் இணைகிறார். இந்த படத்துக்கு இசை சாய் அபயங்கர். இளம் பட்டாளங்கள் இணைந்துள்ள இந்த கூட்டணி வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.