தொட்டாலே பவரு.. மீண்டும் ரூ.58 ஆயிரத்தை அடைந்த தங்கம் விலை!
Author: Hariharasudhan11 December 2024, 10:25 am
சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 80 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 285 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: விரதம் மாதம் என அழைக்கப்படும் கார்த்திகை மாதம், தொடர்ச்சியான சுபமுகூர்த்த நாட்களால் தங்கம் விலை கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து அதிகரித்தே வந்தது. இதனிடையே, வார இறுதி நாட்களில் மாற்றம் இல்லாமல் இருந்து வந்தது. ஆனால், இன்று தங்கம் விலை மீண்டும் அதிக அளவு உயர்ந்து இருக்கிறது.
இதன்படி, இன்று (டிச.11) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 80 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 285 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 640 ரூபாய் உயர்ந்து 58 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: செய்தியாளர்கள் மீது பிரபல தெலுங்கு நடிகர் ஆக்ரோஷ தாக்குதல்.. வைரலாகும் வீடியோ!
அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 7 ஆயிரத்து 940 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 63 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளியும் கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து 103 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.