கப் நூடுல்ஸ் சாப்பிட்ட அக்கா – தம்பி.. அடுத்து நேர்ந்த சோகம்.. சிவகங்கையில் பரபரப்பு!

Author: Hariharasudhan
11 December 2024, 12:41 pm

சிவகங்கை, திருப்புவனம் அருகே உள்ள சூப்பர் மார்க்கெட்டில் காலாவதியான கப் நூடுல்ஸ் சாப்பிட்ட அக்கா – தங்கை உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டனர்.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே தனியார் பல்பொருள் அங்காடி (Super Market) ஒன்று உள்ளது. இங்கு புதூர் பகுதியைச் சேர்ந்த சந்தானராஜன் என்பவரின் மகன் ருத்ரபிரியன் மற்றும் சுஜித் மண்டல் என்பவரின் மகள் அகான்ஸா மண்டல் ஆகியோர் கப் நூடுல்ஸை வாங்கி உள்ளனர்.

இதற்காக அவர்கள் 166 ரூபாய் பணம் செலுத்தி உள்ளனர். இந்த நிலையில், இதனை வீட்டுக்கு கொண்டு வந்த சிறுவர்கள், அதனைச் சமைத்து சாப்பிட்டு உள்ளனர். அப்போது, இருவருக்கும் வாந்தி, குமட்டல், எரிச்சல் உள்ளிட்ட உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.

Children affected for eating cup noodles in Thiruppuvanam

எனவே, இது குறித்து தனது தந்தையிடம் சிறுவர்கள் கூறி உள்ளனர். பின்னர் உடனடியாக குழந்தைகள் வாங்கி வந்த கப் நூடுல்ஸ் டப்பாவை அவர் சோதனை செய்து உள்ளார். அதில், அந்த நூடுல்ஸ் கடந்த ஆகஸ்ட் மாதத்திலே காலாவதி ஆனது தெரிய வந்து உள்ளது.

Children affected for eating cup noodles in Sivaganga

இதனையடுத்து, குழந்தைகள் இருவரையும் அவர் திருப்புவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்து உள்ளார். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், வேறு ஒன்றும் இல்லை எனக் கூறி உள்ளனர். எனவே, அவர்கள் வீடு திரும்பினர். இந்த நிலையில், இது குறித்து அவர் உணவு பாதுகாப்புத் துறையில் புகார் அளித்து உள்ளார்.

இதையும் படிங்க: VPN மூலம் மிகப்பெரிய நெட்வொர்க்.. பாங்காங்கில் இருந்து போதைப்பொருள் வந்தது எப்படி? மேலும் இருவர் கைது!

இதன் பேரில் சம்பந்தப்பட்ட பல்பொருள் அங்காடியில் உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து, காலாவதியான நூடுல்ஸ் மற்றும் மசாலா பாக்கெட்டுகளைக் கைப்பற்றி அழித்தனர். மேலும், சிவகங்கை, திருப்புவனம் பகுதியில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

  • Seenu Ramasamy announced his divorce விவாகரத்து அறிவித்த பிரபல இயக்குனர்.. ரஜினி பிறந்தநாளில் அதிர்ச்சி!
  • Views: - 77

    0

    0

    Leave a Reply