பத்திரிகையாளர் சந்திப்புக்கு பயந்து பாதியில் ஓடிய புஸ்ஸி ஆனந்த்.. காரில் ஏறி தப்பிய வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
11 December 2024, 6:03 pm

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த காட்டாங்குளத்தூர் பகுதியில் தனியார் கடை திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக, தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டார்.

தனியார் கடை திறப்பு விழாவை முடித்த பிறகு, கடையை சுற்றி பார்த்தார். இதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெறுவதாக தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர்.

நிருபர்கள் சந்திப்புக்கு பயந்து ஓடிய புஸ்ஸி ஆனந்த்

பத்திரிகையாளர் சந்திப்பு இருப்பதாக தெரிவித்ததின் அடிப்படையில் பத்திரிகையாளர்கள், காத்திருந்தபோது மேடைக்கு சென்று பேட்டி தருவதாக புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் மேடைக்கு சென்று காத்திருந்தனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய புஸ்ஸி ஆனந்த் நிர்வாகிகள் மற்றும் கருப்பு உடை அணிந்திருந்த பவுன்சர்களின் உதவியுடன், பத்திரிக்கையாளர் கேள்விக்கு பயந்து கடையிலிருந்து அவசர அவசரமாக வெளியேறி காரில் ஏறி 30 நொடிக்குள் சிட்டாக பறந்து சென்றார்.

இதையும் படியுங்க: 50 வருடங்களுக்கு முன் மூதாட்டியிடம் திருடிய ரூ.37.50 பணம்.. ₹3 லட்சமாக திருப்பி கொடுத்த தொழிலதிபர்!

கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கக்கூடிய புஸ்ஸி ஆனந்த் வருகையை முன்னிட்டு, அவருக்கு பூங்கொத்து கொடுப்பதற்காக காத்திருந்த நிர்வாகிகளும் ஏமாற்றும் அடைந்தனர்.

கட்சியின் பொதுச் செயலாளர் பேட்டி கொடுக்க பயந்து ஓடிய சம்பவம் தவெக தொண்டர்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Dhanush Upcoming Project Dropped தனுஷ்க்கு இது சோதனை காலம்… முக்கிய படத்தை கைவிட முடிவு?!
  • Views: - 48

    0

    0

    Leave a Reply