‘அதானி பத்தி பேசுனதும் கரண்ட் போகுது..’ சைலண்ட்டாக கலாய்த்த தமிழிசை!

Author: Hariharasudhan
11 December 2024, 6:02 pm

அதானி பற்றி பேசியதும் மின்சாரம் தடைபடுகிறது, எனவே மின்சாரத்துறை அமைச்சருக்கும் இதற்கும் எதோ சம்பந்தம் இருக்கும் என தமிழிசை செளந்தரராஜன் கூறினார்.

சென்னை: கவிஞர் பாரதியார் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பாரதியார் சிலைக்கு இன்று (டிச.11) காலை, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, அதானி விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த தமிழிசை செளந்தரராஜன், “நான் சந்திக்கவில்லை என்று தான் முதலமைச்சர் சொல்கிறார். தன் குடும்பத்தைச் சார்ந்த யாரும் சந்திக்கவில்லையா என்பதையும் முதலமைச்சர் விளக்க வேண்டும். அதுதான் தமிழக மக்களின் விருப்பம்” எனக் கூறினார்.

Tamilisai Soundararajan about Adani issue regards Solar power

இவ்வாறு அவர் பேசிக் கொண்டிருக்கும் போது ஒரு நொடி மின்விளக்கு அணைந்து, பின் மீண்டும் எரிந்தது. அப்போது, “என்னப்பா அதானியைப் பற்றி பேசியதும் பவர் போய்டுது. மின்சாரத்துறை அமைச்சருக்கும் இதற்கும் எதோ சம்பந்தம் இருக்கும் போல” என்று சிரித்துக் கொண்டே பேசிவிட்டு அங்கிருந்து சென்றார்.

Tamilisai Soundararajan about Adani issue with MK Stalin

அதானி விவகாரம்: சூரிய சக்தி மின்சாரத்தை தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு விற்பதற்காக 250 மில்லியன் டாலர் அளவுக்கு இந்திய பெருந்தொழிலதிபர்களில் ஒருவரான கவுதம் அதானி லஞ்சம் கொடுத்ததாகவும், அதை மறைக்கத் திட்டமிட்டதாகவும் அமெரிக்க நீதிமன்றத்தில் சமீபத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

இதையும் படிங்க: ஏழைகளுக்காக வாழும் தெய்வம்.. ரூ.2 லட்சம் கொடுத்த KPY பாலாவுக்கு குவியும் பாராட்டு!

இந்தக் குற்றச்சாட்டு வெளியானதும், கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னை வந்த அதானி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து இது தொடர்பாக பேசியதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்த நிலையில், நேற்று சட்டப்பேரவையில் பேசிய ஸ்டாலின், “அதானி விவகாரத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்னை வந்து அவர் சந்திக்கவும் இல்லை, நானும் அவரைப் பார்க்கவில்லை” என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Dhanush Upcoming Project Dropped தனுஷ்க்கு இது சோதனை காலம்… முக்கிய படத்தை கைவிட முடிவு?!
  • Views: - 46

    0

    0

    Leave a Reply