விடாமுயற்சி ஆடியோ விழாவில் விஜய் மகன்? தயாரிப்பு நிறுவனம் அப்டேட்!
Author: Udayachandran RadhaKrishnan12 December 2024, 11:36 am
அஜித் நடிப்பில் நீண்ட காலமாக எடுக்கப்பட்ட படம் தான் விடாமுயற்சி. மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.
சமீபத்தில் விடாமுயற்சி படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது.
விடாமுயற்சி ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் மகன்
இந்த நிலையில் படத்தின் முதல் ஆடியோ டிராக் வெளியாக உள்ளது. அனிருத் பாடிய இந்த பாடல் மெலடியாக உருவாகியுள்ளதாகவும், அஜித் திரிஷாவுக்கு நல்ல டூயட் சாங் என சொல்லப்படுகிறது.
இதையும் படியுங்க: சட்டப்படி வழக்கை சந்திக்க தயாரா இருங்க… ஊடகங்களுக்கு சாய் பல்லவி எச்சரிக்கை!
இதனிடையே படம் ரிலீஸ் ஆக ஒரு மாத காலமே உள்ள நிலையல், ஆடியோ வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த தயாரிப்பு நிறுவனம் லைகா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் சிறப்பு விருந்தினராக அழைக்க லைகா முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
லைகா நிறுவன தயாரிப்பில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் முதன்முறையாக இயக்குநராக அறிமுகமாகிறார். விழாவுக்க ஜேசன் வந்தால் நிச்சயம் விஜய் பற்றி பேசுவார் எனவும் நம்பப்படுகிறது.