ரஜினி பிறந்தநாளுக்காக உருகி வேண்டிய பாஜக பிரமுகர்.. யாருன்னு பாருங்க!
Author: Udayachandran RadhaKrishnan12 December 2024, 2:28 pm
நோய் நொடி இல்லாமல் சந்தோசமாக வாழ புண்ணிய ஷேத்திரத்தில் இருந்து வாழ்த்துகிறேன் என பாஜக பெண் நிர்வாகி ரஜினியை வாழ்த்தியுள்ளார்.
ரஜினிகாந்த்துக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய ராதிகா
திருப்பதி மலையில் இருந்து பாஜக பிரமுகரும் நடிகையுமான ராதிகா நடிகர் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.
இதையும் படியுங்க: கூலி படத்தின் சூப்பர் அப்டேட்… ரஜினி பிறந்தநாளில் லோகேஷ் அறிவிப்பு!
நடிகை, பாஜக பிரமுகர் ராதிகா இன்று காலை திருப்பதி கோவிலில் ஏழுமலையானை வழிபட்டார். விஐபி பிரேக் தரிசனம் மூலம் சாமி கும்பிட்டபின் கோவிலுக்கு வெளியே கொட்டும் மலையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர் நடிகர் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது, நல்லா இருக்கட்டும். நோய் நொடி இல்லாமல் சந்தோசமாக வாழட்டும் என்று இந்த புண்ணிய ஷேத்திரத்தில் இருந்து வாழ்த்துகிறேன் என்று அப்போது கூறினார்.