என்ன வச்சு சம்பாதிக்குறாங்க : இந்த பொழப்புக்கு..? இறங்கி அடிக்கும் நயன்தாரா..!
Author: Selvan12 December 2024, 3:07 pm
மூன்று குரங்குகளை விமர்சித்த நயன்தாரா
நடிகை நயன்தாரா தற்போது தனக்கு எதிராக யார் செயல்பட்டாலும் நேருக்கு நேர் பதிலடி கொடுத்து வருகிறார்.ஏற்கனவே தனுஷின் NOC பிரச்சனையில் விக்னேஷ் சிவன், தனுஷை தாக்கி சமூக வலைத்தளங்களில் பதிவை வெளியிட்டார்.
தற்போது நயன்தாரா பிரபலமான ஒரு சேனலுக்கு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.அதில் வலைப்பேச்சு யூடியூப் சேனலில் பேசி வரும் பத்திரிகையாளர்களை குரங்கு என விமர்சித்துள்ளார்.
ஏற்கனவே நடிகர் தனுஷை ஜெர்மனி வார்த்தையால் திட்டிய நிலையில் தற்போது பத்திரிக்கையாளர்களை குரங்கு என சொல்லியது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்க: இருக்க இடம் கொடுத்தா படுக்க பாய் கேட்கும் விக்னேஷ் சிவன்…அரசாங்க சொத்துக்கு ஆப்பு..அதிர்ச்சியில் அமைச்சர்..!
வலைப்பேச்சு சேனலுக்கு எதிராக நயன்தாரா கருத்து
“கெட்டதை பார்க்காதே கேட்காதே பேசாதே” என மூன்று குரங்கு பொம்மைகள் உணர்த்தும் செயலை நயன்தாரா குறிப்பிட்டு,அதற்கு எதிர்மறையாக “கெட்டதை மட்டும் பார்…கெட்டதை பேசு…கெட்டதை கேள்” என மூன்று குரங்குகள் சம்பாதித்து வருகின்றனர் என வலைப்பேச்சு சேனலில் உள்ள அந்தணன்,பிஸ்மி மற்றும் சக்திவேலை கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.
சமீபகாலமாக வலைப்பேச்சு சேனல் நயன்தாராவை கடுமையாக விமர்சித்து விடீயோக்களை வெளியிட்டு வந்தனர்,இதற்கு தக்க பதிலடியை நயன்தாரா திருப்பி கொடுத்துள்ளார்.தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.