கோவாவில் கோலாகலமாக நடந்த கீர்த்தி சுரேஷ் திருமணம்..வேஷ்டி சட்டையில் விஜய்!
Author: Udayachandran RadhaKrishnan12 December 2024, 4:02 pm
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். தற்போது பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்துள்ளார்.
இன்று 15 வருட காதலான ஆண்டனி தட்டிலை கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்து கொண்டார். கேவாவில் கோலாகலமாக இந்த திருமணம் நடைபெற்றது.
இதையும் படியுங்க: ரஜினி பிறந்தநாளுக்காக உருகி வேண்டிய பாஜக பிரமுகர்.. யாருன்னு பாருங்க!
நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், சினிமா பிரபலங்கள் பங்கேற்றனர். அதில் நடிகர் விஜய் பங்கேற்றார். வேஷ்டி சட்டையில் விஜய் பங்கேற்ற போட்டோக்கள் வைரலாகி வருகிறது.
காலையில் இந்து முறைப்படியும், மாலை கிறிஸ்துவ முறைப்படியும் இந்த திருமணம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
கீர்த்தி மற்றும் விஜய் இணைந்து இரு படங்களில் ஒன்றாக நடித்திருந்தனர். இருவருக்கும் இடையே பபல்வேறு வதந்திகள் பரவியது. தனது 15 வருட காதலரை இன்று அவர் திருமணம் செய்தார். அதே போல கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் விஜ்ய் கலந்து கொண்டு வதந்திகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.