மிதக்கும் செங்கோட்டை.. நெல்லை, தென்காசியில் சூழ்ந்த மழைநீர்.. மக்கள் கடும் அவதி!

Author: Hariharasudhan
13 December 2024, 11:10 am

திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் நேற்று முதல் இடைவிடாது மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர்.

திருநெல்வேலி: வங்கக் கடலில் நிலை கொண்டு உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் கடந்த இரண்டு நாட்களாக, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது.

அந்த வகையில், நேற்று முழுவதும் நெல்லை மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடைவிடாது கனமழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக, குற்றாலத்தின் (Courtallam Falls flood) அனைத்து அருவிகளிலும் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Tenkasi Courtallam Main falls flood

மேலும் நெல்லை (Nellai Rain) மாவட்டத்தில் நேற்று மாலை 4 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மொத்தம் 242 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. அதேபோல், அம்பாசமுத்திரம் – 61.40 மி.மீ, சேரன்மகாதேவி- 55 மி.மீ, மணிமுத்தாறு- 45.20 மி.மீ, நாங்குநேரி- 24 மி.மீ, பாளையங்கோட்டை- 14 மி.மீ, பாபநாசம்- 20 மி.மீ, ராதாபுரம்- 7.40 மி.மீ மற்றும் திருநெல்வேலியில் 15 மி.மீ மழையும் பதிவாகி உள்ளது.

இந்த நிலையில், மாஞ்சோலை எஸ்டேட் (Manjolai Estate) ஊத்துமலையில் 500 மி,மீ அளவு மழை பதிவாகி உள்ளது. அதேபோல், நெல்லை மாநகரின் முக்கியப் பகுதிகளான ரயில் நிலையம், புதிய பேருந்து நிலையம், நெல்லை டவுன் சந்திப்பு ஆகிய இடங்களிலும் கனமழையால் வெள்ள நீர் தேங்கி காணப்படுகிறது.

செங்கோட்டையில் மழை வெள்ளம்: மேலும், தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் (Tenkasi Sengottai Rain) 24 செமீ மழை பதிவான நிலையில், குளக்கரையின் ஒரு பகுதி உடைந்ததால் நகரின் மையப் பகுதியில் வெள்ள நீர் கழுத்தளவு செல்கிறது. குற்றாலம் பிரதான அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், பாலம் உடைந்து வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

Nellai Thamirabarani River flood by heavy rain

இந்த நிலையில், தென்காசி (Tenkasi Rain) – கொல்லம் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம், சங்கன்கோவில் சங்கரணார் கோவில் வளாகம் மற்றும் உட்புறத்தில் முழங்கால் அளவு தண்ணீர் உள்ளது. மேலும், நெல்லை தாமிரபரணி ஆற்றிலும் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

அது மட்டுமல்லாமல், மணிமுத்தாறிலும் வெள்ளம் ஓடுகிறது. நெல்லையில் இருந்து மாஞ்சோலை எஸ்டேட் செல்லும் சாலையில் ராட்சத பாறையும் விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கடு சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர்.

  • Pushpa 2 Kissik song வசனமடா முக்கியம்…ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த புஷ்பா 2 “கிஸ்ஸிக்” பாடல் வீடியோ இதோ…!
  • Views: - 125

    0

    0

    Leave a Reply