கொத்து கொத்தா முடி கொட்டினாலும் சரி… முருங்கை இலை எண்ணெய் ஒன்னு இருந்தா போதும்… ஆல் பிராம்லம் சால்வ்டு!!!

Author: Hemalatha Ramkumar
13 December 2024, 3:31 pm

முருங்கைக் கீரையின் பயன்கள் சமீபத்தில் தான் அதிக அளவில் பிரபலமடைந்து வருகிறது. இந்த ஊட்டச்சத்து நிறைந்த கீரை உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தருவது மட்டுமல்லாமல் பல்வேறு அழகு சார்ந்த நன்மைகளுக்கும் உதவி புரிகிறது. முருங்கை மரத்தின் விதைகளை அழுத்தி எடுக்கப்படும் முருங்கை எண்ணெய் என்பது சருமத்திற்கு போஷாக்கு வழங்கவும், பல்வேறு சரும பிரச்சனைகளில் இருந்து விடுபடவும் உதவுகிறது. மேலும் இது தலைமுடியை வலுவாக்கி, மயிர்க்கால்களை சுத்தம் செய்து பொடுகு பிரச்சனையை தடுத்து, தலை முடியின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. எனவே முருங்கை கீரை எண்ணெயின் பலன்கள் மற்றும் அதனை எப்படி பயன்படுத்தலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

தலைமுடியை வலுவாகுகிறது 

தலைமுடி என்பது முதன்மையாக கெரட்டின் புரோட்டீனால் ஆனது. ஒவ்வொரு மயிர் இழையிலும் 95 சதவீதம் கெரட்டின் புரோட்டீன் உள்ளது. ஆனால் நமக்கு வயதாகும் பொழுது கெரட்டின் உற்பத்தி இயற்கையாகவே குறைகிறது. இதனால் தலைமுடியில் வறட்சி உடைந்து போதல், மெலிந்து போதல் மற்றும் இழப்பு ஏற்படுகிறது. முருங்கைக்கீரை எண்ணெயில் உள்ள அதிக அளவு சின்க் கெரட்டின் உற்பத்தியை தூண்டி, வயது காரணமாக ஏற்படும் குறைபாட்டை ஈடுசெய்கிறது.

இதையும் படிச்சு பாருங்க: இந்த காய்கறிகளை பச்சையா சாப்பிடறது தான் ரொம்ப நல்லது!!!

பளபளப்பு மற்றும் மென்மை 

முருங்கைக்கீரை எண்ணெயில் கொழுப்பு அமிலங்கள், பெஹனிக் அமிலம் போன்றவை இருப்பதால் இது தலைமுடியை பளபளப்பாகவும் பட்டு போன்று மென்மையாகவும் மாற்றுகிறது. இந்த கொழுப்பு அமிலங்கள் ஒவ்வொரு மயிரிழைக்கும் தேவையான போஷாக்கை வழங்கி, அதே நேரத்தில் அதற்கு ஒரு பாதுகாப்பு தடையை உருவாக்கி, அளவுக்கு அதிகமான ஈரப்பதத்தை வெளியேற்றி சுற்றுச்சூழல் நச்சுகளில் இருந்து தலை முடியை பாதுகாக்கிறது.

தலைமுடிக்கு தேவையான ஈரப்பதம் 

மயிர்க்கால்களுக்கு ஈரப்பதத்தை தருவதற்கான திறன் இந்த முருங்கைக்கீரை எண்ணெய்க்கு உள்ளது. ஈரப்பதம் என்பது தலைமுடி வளர்ச்சிக்கு அத்தியாவசியமான ஒரு அடிப்படையான விஷயம். மேலும் இது வறட்சியை போக்கி வேர்கள் முதல் தலைமுடி வரை தேவையான போஷாக்கை வழங்குகிறது.

முருங்கைக்கீரை எண்ணெயை தலை முடிக்கு பயன்படுத்துவது எப்படி? 

முருங்கைக்கீரை எண்ணெயை பயன்படுத்துவதற்கான சிறந்த வழி அதனை நேரடியாக உங்களுடைய மயிர் கால்களில் மசாஜ் செய்வது தான். மேலும் இதனை ஹேர் மாஸ்க்காக பயன்படுத்திய பிறகு ஷாம்பு வைத்து வழக்கம் போல தலைமுடியை அலசலாம்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Atlee and assistant directors relationship அஜித் பாணியில் அட்லீ செய்த நெகிழ்ச்சியான செயல்…குவியும் பாராட்டுக்கள்..!
  • Views: - 68

    0

    0

    Leave a Reply